கவிதைகள்

தன்னை நம்பியவர்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

பார்போற்றும் வண்ணம் ஏவுகணை ஏவினார்சீர்மிக்க விஞ்ஞானியாய் சிறந்தும் நின்றார்யாரென்று எண்ணி இவ்வுலகு வியக்கையில்கூர்மதியுடன் குவலயத்தில் உயர்ந்திட்டார்ஐயா அப்துல் கலாமும் நம்பிக்கை வைத்தார்பொய்யாக போகவில்லை புகழ் அடைந்தார்மெய்யாக வெற்றி கண்டார் விண்வெளியில்தொய்வின்றி முயற்சியிலும் பலனடைந்தார்.ஏவுகணைநாயகனாய் சாதனைகள் படைக்கதீவுபோல் மணமுடிக்காது தனித்துநின்றார்மேவுபுகழ் பத்மவிருதாம் மூன்றை வென்றார்சாவுவந்து கொண்டு செல்ல விட்டகன்றார்துன்பம் வந்தால் கண்களை மூடாதே என்றார்நன்மையின்றி நம்மையது கொல்லுமென்றார்இன்பமொடு நம்பிக்கை வைத்து நின்றாலேவென்றிடுவாய் கண்திறந்ததை நீ பாரென்றார்கனவுகண்டிட நம்பிக்கையோடு சொன்னார்நனவாகும் நாடும் வல்லரசாய் வளருமென்றார்இனமதிலே பற்றுகொண்ட நற்றமிழர் அவர்தினமிது அவர் பிறந்ததினம் போற்றுவோமே!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *