ஒன்றுமே செய்யாமல் இருப்பதால்…இவ்வளவு செலவா?
ஒன்றுமே செய்யாமல் இருப்பது..யாருக்கும் பலனைத் தராவிட்டாலும் பாதிப்பைத் தராது என்று எண்ணலாம்…
ஆனால் அதிகச் செலவை ஏற்படுத்தக்கூடியது என்று தெரியுமா?
துடிப்பாகச் செயல்படாமல் இருப்பது சுகாதார ரீதியாக 2030-ஆம் ஆண்டுக்குள் 430 பில்லியன் டாலர் செலவை ஏற்படுத்தக்கூடும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
அதுகுறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
துடிப்பாகச் செயல்படாததால் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுதோறும் 500 மில்லியன் புதிய நோயாளிகள் உருவாகலாம் என்று கூறப்பட்டது. அனைவரும் தவிர்த்திருக்கக்கூடிய நோய்களால் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆண்டுதோறும் 27.4 பில்லியன் டாலர் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செலவுகள் பெரும்பாலும் மனச்சோர்வு, மறதிநோய், உயர் ரத்த அழுத்தம் பொன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடையவை.
மக்களிடையே துடிப்பான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதற்கு உலக நாடுகள் அதன் கொள்கைகளைத் துரிதமாகச் செயல்படுத்தவேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Ghebreyesus) சொன்னார்.
![]()