மரணத்தை வென்றவர்கள்… இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெறமுடியுமா? வியக்கவைக்கும் தொழில்நுட்பம்
நைட்ரோஜன் (Nitrogen) திரவம் நிரப்பப்பட்ட தொட்டிகளில் உறையவைக்கப்பட்ட 199 மனிதத் தலைகளும் உடல்களும்…
வியக்கவைக்கும் cryopreservation எனும் தொழில்நுட்பம் அமெரிக்க மாநிலமான அரிஸோனாவில் கையாளப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் விஞ்ஞானம் வளரும்போது மீண்டும் உயிர்பெற முடியும் என்ற நம்பிக்கையில் இறந்தவர்களின் உடல்கள் உறைய வைக்கப்பட்டுள்ளன.
இருப்பில் உள்ள மனித உடல்களில் பெரும்பாலானவை கடுமையான புற்றுநோய் அல்லது சிகிச்சைவழி தீர்க்கமுடியாத பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் என்று Alcor Life Extension Foundation கூறியது.
உறைய வைக்கப்பட்ட உடல்களில் ஆக இளவயதுடையது தாய்லாந்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியின் உடலாகும்.
மூளைப் புற்றுநோயால் உயிரிழந்த அந்தச் சிறுமி 2015ஆம் ஆண்டு cryopreservation முறையின்கீழ் உறையவைக்கப்பட்டார்.
Cryopreservation தொழில்நுட்பம் எவ்வாறு செயல்படுகிறது?
இறந்ததாக உறுதிசெய்யப்படும் நபரின் உடலிலிருந்து ரத்தமும் இதர திரவங்களும் வெளியேற்றப்பட்டு உடல் கெட்டுப்போகாமல் இருக்க தகுந்த இரசாயனங்கள் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன.
பிறகு உடல் உறையவைக்கப்படுகிறது.
அவ்வாறு செய்ய ஓர் உடலுக்குக் குறைந்தபட்ச செலவு 20,000 அமெரிக்க டாலர் (சுமார் 28,800 வெள்ளி) ஆகும்.
மூளையை மட்டும் உறையவைக்க 80,000 அமெரிக்க டாலர் (சுமார் 115,000 வெள்ளி) செலவாகும் என அமைப்பு தெரிவித்தது.
அமைப்பின்கீழ் உயிர்வாழும் 1,400 பேர் ஆயுள் காப்பீடு கொண்டிருப்பது மற்றோர் ஆச்சரியப்பட வைக்கும் உண்மை.
![]()