கவிதைகள்

( கவிதை ) முல்லை அமுதன்

உடலிலிருந்து உதிர்ந்த ஒரு கால்
அவள் கைகளில்
இருக்கக்கண்டேன்.
கேட்டேன்
‘என் முயலில்
நான்காவது கால்’ இதுவென்றாள்.
‘உன் முயலுக்கு மூன்று கால் தானே?’கேட்டேன்.
‘இன்று முதல் என் முயலுக்கு நான்கு கால்கள்’ என்றாள்.
‘இப்போது யார் தந்தது?’
‘கனவில் வந்த கடவுள்
தந்து சென்றார்’
‘சரி,
எனி உன் முயலுக்கு நான்கு கால்கள் என்று சொல்வாயா?’.
‘ஆம்’ என்று உறுதியாகச் சொன்னாள்.
எந்தக் கடவுளரும் என் கனவில் வந்ததில்லை.
‘இன்று பலநாள் கேள்வி
விடை கிடைத்தது.
‘நானும் சொல்லிக்கொள்வேன்.
என் முயலுக்கு நான்கு கால்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *