சங்கமும் சந்தையும்!… ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

சங்கமென ஒன்றைச் செய்தார்
சகலரும் ஒன்றாய்க் கூடிநிற்கமொழிச்சங்கம் கண்டவருமிங்குசாதிச்சங்கம் சேர்த்து கண்டார்மொழிச்சங்கத்தால் சேர்ந்தவரோசாதிச் சங்கத்தாலே பிளவுபட்டார்ஒரு சங்கத்தால் இங்கு சேர்ந்தவரேமற்றொன்றாலே தனித்தே நின்றார்சந்தை என்று ஒன்றும் கண்டார்அங்கும் மக்கள் ஒன்று சேர்ந்தார்ஆடு மாடு பொருட்கள் யாவுமங்கேவிற்று வாங்க நல்வழிகள் கண்டார்சங்கமதைக் கண்டவனும் மாந்தன்சந்தையைக் கண்டவனும் மாந்தன்நீதியை எடுத்துரைத்தவனும் மாந்தன்நீதியை தடம்மாறச் செய்தவனுமவன்சந்தயிலே சங்கம் கண்டுவிட்டான்சங்கமதை சந்தையாக்கி விட்டான்ஒன்றாயிருந்து மொழிவளர்த்தல் விட்டுதனித்தனியாய் சந்தை செய்துவிட்டான்எருது நான்கும் ஒன்றாயிருந்த வேளை சிங்கம் எதுவுமே செய்வதறியாது நிற்கஎருதுகள் பிளவுபட்டு நின்றது கண்டேஏற்றமொடு வேட்டையாடி வென்றதுவாம்இந்நீதி படித்த மண்ணில் வாழ்ந்தவரேமாண்பை மற்றவர்க்கு சொன்னவராம்மரபு மாறித் தனித்தனியே நிற்கலாமாசங்கம் வேறு சந்தை வேறு அறிகிலரோ!-சங்கர சுப்பிரமணியன்.
![]()