கவிதைகள்

மாமனிதன்!…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

சமூகச் சீர்திருத்தம் என்பான்சாதிக்கொரு சங்கம் வைப்பான்இறைவன் ஒருவன் என்பான்ஆளுக்கொரு இறைவன் செய்வான்

அன்பாய் இருக்க அறிவுறுத்துவான்அவனே அன்பெனில் என்ன என்பான்யாரையும் மறந்தும் புகழ்ந்திட மாட்டான்யாவரும் தன்னை புகழ எதிர்பார்ப்பான்

எவரும் தன்னைப் புகழா நிலைகண்டுதன்னைப் புகழ்ந்து தற்பெருமை கொள்வான்விருந்தோம்பல் பற்றி விளக்கிடுவான்விருந்து புறத்திருக்க உண்டு மகிழ்வான்

ஆண்டவன் உண்டியலில் கொட்டுவான்அண்டியவரிடம் நன்றாய் சுரண்டுவன்பெண்ணுரிமை பற்றி பீற்றித்திரிவான்பெண்ணடிமை செய்வதில் திளைப்பான்

ஆறடி நிலமே நமக்கு சொந்தமென்பன்அடுத்தவர் நிலமெல்லம் ஆக்கிரமிப்பான்பொன் பொருள் நிலையற்றதென்பான்பொன்னையும் பொருளையும் சேர்ப்பான்

எதுவும் நிலயற்றதென தத்துவம் சொல்வான்எல்லாமும் தனக்கென பேராசை கொள்வான்இத்தனையையும் நமக்கு சொல்பவன்எதையும் பின்பற்றாத அவனே மாமனிதன்!-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *