4 வயதில் மூக்குக்கு உள்ளே போன 5P 10 வருடம் கழித்து தும்மும் போது தான் வெளியே வந்தது!

ஆச்சரியம் ஆனால் உண்மை தான். குரைடனில் வசித்து வரும் உமீர் என்ற 14 வயதுச் சிறுவன், மிகவும் கடுமையாக தும்மலை ஏற்படுத்தி குறித்த 5P பென்ஸ் நாணயத்தை வெளியே எடுத்துள்ளார்.

அவர் 4 வயதாக இருக்கும் போது இந்த 5P பென்ஸ் நாணயம் அவர் மூக்குக்கு உள்ளே சென்றுள்ளது. அன்று முதல் சில வேளைகளில் அவருக்கு வலி இருந்து வந்தது. ஆனால் எந்த ஒரு மருத்துவரும் சரியாக இதனை கண்டு பிடிக்கவே இல்லை என்பது, ஆச்சரியமான விடையமா இல்லை அசண்டையீனமா என்று தெரியவில்லை. இறுதியாக 10 வருடங்கள் கழித்து, அவர் 14 வயதில் இருக்கும் வேளை தான் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, உள்ளே நாணயம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து சத்திர சிகிச்சை மூலம் வெட்டி நாணயத்தை வெளியே எடுக்க முடியும். இல்லையென்றால் மிக மிக கடுமையான தும்மலை ஏற்படுத்தினால் நாணயம் தானாக வெளியே வர வாய்ப்பு உள்ளது என்று அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவிக்க. இந்த சிறுவன் மிக கடுமையாக தும்மலை ஏற்படுத்தி நாணயத்தை வெளியே எடுத்துள்ளான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button