கவிதைகள்

பண்பறியா பதராவீரோ?…. ( கவிதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

மழைநீர் மண்ணில் சேர்வதைஎவரும் தவறென்பாரோஆறுகள் கடலில் கலப்பதை அநீதிஎன்பாரும் இங்குண்டோஉமையொரு பாகனென்றுசிவனுடன் உமை இணைவதைஎவரும் ஏற்றிடல் இல்லயோஒருவர் இழுத்து வெளியிட்ட காற்றும்இன்னொருவர் மூச்சில் இணையாதோஒரு மலரின் மகரந்தத் தூள்மற்றொரு சூலை அடைந்தால்இயற்கையில் சூலுறுவது நிகழாதோவறியோர் விளைவித்த பொருளுமேசெல்வந்தர் வீட்டின் உட்புகாதோதவளை மீன் யாவும் வாழ்கின்ற நீரும்தாகத்தை தீர்க்கவும் உதவாதோசேற்றில் மலர்ந்த செந்தாமரையும்சேரும் இடம் என்று வேறுள்ளதோகாற்றிலே உன்மூச்சும் ஒருநாள்கலந்து நீ மறைவாய் என்றறிந்தும்காட்டிலும் உனக்கொரு பிடிமண்சொந்தமில்லை என்பதுணர்ந்தும்நாட்டிலே ஒரு யுவனும் ஒரு யுவதியும்மனமொத்து சொந்தம் கொண்டால்வீட்டில் பூட்டிவைத்து விலங்கிடுவரோபாட்டில் சொன்ன பிறப்பொக்குமெனநாட்டமிகு பண்பின் பதமறியா பதராவீரோ?-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *