ஓஜிமா என்ற பிச்சைக்காரன்!… ( சிறுகதை ) ….. பொன் குலேந்திரன் (கனடா)

முன்னர் ரொடீசிய குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே ஆபிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும்.
சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும் உள்ளன. சிம்பாப்வே என்ற பெயரானது கல் வீடு எனப் பொருள்படும் இந்த பெயர் சோனா மொழிப் பதத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.அந்த நாடு ஒரு காலத்தில் ஆங்கிலேயரால் ஆக்கிரமிக்கப்பட்டு அந்த நாட்டு பூர்வ குடிமக்கள் பலர் பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு தள்ளப் பட்டனர் . ஓரு சில குடும்பங்கள் அடிமைகளாக அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியாவுக்கு கப்பலில் அழைத்து செல்லப் பட்டனர் அங்கு பருத்தி , நிலக் கடலை தோட்டங்களில் வேலை செய்தனர் . சிலர் வேல்க்காரர்களாக இருந்தனர் மற்றும் பட்லர்கள், பணியாளர்கள், பணிப்பெண்கள், தையல்காரர்கள் மற்றும் சலவை செய்பவர்களாக பணியாற்றினர். மற்றவர்கள் வண்டி ஓட்டுநர்கள், ஹோஸ்டலர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் வில்லியம் என்பவனும் ஒருவன் அவனின் பேரனின் மகள் மேரி என்பவளின் இருபத்திஓராம் நூறாண்டு காலத்தில்அடிமைத்தனம் நீங்கிய படியால் மேரி படித்து சந்தை படுத்தும் துறையில் பட்டம் பெற்றாள். நியூ யோர்க்கில் அவள் வேலை செய்த நிறுவனம் அவளுக்கு சிரேஷ்ட டைரக்டர் பதவிஉயர்வு கொடுத்து மிசிசாகாவில் உள்ள நிறுவனத்தின் கிளைக்கு மாற்றியது .கார் சொந்தத்தில் இருந்தும் ,மேரி வீட்டில் இருந்து நடந்தே அரைகி மீ தூரத்தில் உள்ள தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு செல்வாள். அப்போது அவள் தினமும் பாதை ஓரத்தில் தாடியும் மீசையும் உள்ள ஒருவன் கிழிந்த ஆடையுடணும் , கையில் குவளையுடன் மரத்தின் கீழ் இருந்து பிச்சை எடுப்பதைக் கண்டாள். அவளோடு வேலை செய்யும் அவளின் சினேகிதி ஜெனியோடு அந்த பிச்சைக்காரன் பற்றி வினாவிய போது ,
“மேரி அவன் கனடாவின் தெற்கு ஒன்ராறியோவில் அமைந்துள்ள அனிஷினாபே பேசும் முதல் நாடுகளின் மக்களின் துணைப்பிரிவான மிசிசாகா பூர்வ குடிமக்களை சேந்தவன் . அவன் பெயர் ஓஜிமா அவன் மீசிசாகவில் உள்ள கிரெடிட் நதி ஒரத்தை சேர்ந்த பூர்வ குடிமகன் . அவனின் பூட்டனார் அந்த நதி கறியோரத்தில் உள்ள பல நலங்களுக்கு சொந்தக்காரன் ஆங்கிலயர் அவனின் பூட்டனாரின் நிலத்தை சொற்ப பணம் கொடுத்து வாங்கிவிட்டனர் . நிலம் இழந்த அவன் எல்லாவற்றையும் இழந்து இப்போ பிச்சை எடுக்கிறான், அவன் மேல் பரிதாபப் பட்டு சில நாட்களில் அவனுக்கு டிம் ஹோர்ட்டன்ஸ் உணவகத்தில் பேகலும் கோப்பியும் வாங்கி கொடுப்பேன் “என்று அவள்சொன்னாள்.
அந்த பிச்சைக்காரன் மிசிசாசா நகரத்தில் உள்ள கிரெடிட் ரிவர் பகுதியை சேர்ந்த பூர்வ குடிமகன் என்று மேரி அறிந்ததும் ,அவளுக்கு அவன் மேல் அனுதாபம் ஏற்பட்டது. காரணம் அவளின் மூதாதையர் சிம்பாப்வே பூர்வ குடிமக்கள் என்றும் , அவர்களும் இதே நிலையில் இருந்தார்கள் என்று அவளின் மறைந்த பெற்றோர் சொல்லி அவளுக்குத் தெரிய வந்தது .
ஜெனி சொன்னதை அறிந்ததும் அடுத்த நாள் மேரி வேலைக்கு போகும் பொது ஓஜிமா என்பவன் கையில் வைத்திருந்த குவளைக்குள் ஒரு இருபது டொலர் நோட்டைபோட்டாள். போடும் போது அவள்விரலில் இருந்த விலை உயர்ந்த வைரக் கல் பதித்த மோதிரமும் பணத்துடன் குவலைக்குள் நழுவி விழுந்ததை அவள் கவனிக்கவில்லை . அந்த மோதிரம் அவளின் திருமணப் பதிவின் போது அவளுக்கு காதலன் பீட்டர் போட்ட மோதிரம்.
அடுத்த நாள் பீட்டர் மேரியை சந்தித்து “ மேரி உனக்கு நான் போட்ட மோதிரத்துக்கு என்ன நடந்தது”? என்று கேட்ட போது தன் கை விரலில் இருந்து மோதிரம் இல்லாததை அவதானிதாள். அவளால் மோதிரத்தை இழந்ததை பீட்டர் அவளிடம் கேட்கும் மட்டும் அவள் அதை கவனிக் வில்லை .விரலில் மோதிரம் இல்லாததை கண்டு அவள் ஓ வென்று அழுதாள். தனது கவனயீனத்தை நினைத்து தன்னைத் திட்டிக் கொண்டாள்.
“மேரி நடந்தது நடந்து விட்டது.உன் விரலுக்கு இறுக்கமான மோதிரம் நான் அளவெடுத்து போட்டிருக்க வேண்டும் .அது நான் செய்த தவறு . மோதிரம் உன்னை விட்டு போனது உனது நல்ல குணத்துக்கு அது ஒரு நாள் உன்னிடம் திரும்பி வரும்.. அழுகையை நிறுத்து” என்று அவளை தேற்றினான் பீட்டர்.
“ எவ்வளவு விலை உயர்ந்த மோதிரம் , பீட்டர் நீ தந்த வைரக் கல் பதித்த மோதிரம் . அதை கண்டு எடுத்தவன் திருப்பித் திருவானா என்பது எனக்கு சந்தேகம் பீட்டர் “ என்றாள் மேரி .
“அது நல்லவன் ஒருவன் கையில் போயிருந்தால் உனக்கு மோதிரம் திரும்பி வரும் “ பீட்டர் அவளை தேற்றினான் .
***
அன்று முழுவதும் அந்த பிச்சைக்கார கிழவனின் குவலையில் விழுந்தது மேரி போட்ட இருபது டொலர் நோட்டும் வேறு சிலர் போட்ட சில்லரைகள் மட்டுமே. குவலையியல் கல் பதித்த பெண்கள் அணியும் தங்க மோதிரம் ஒன்றும் குவளைக்குள் இருபது டொலர் நோட்டுக்குக் கீழ் இருந்ததை அவன் கண்டான் . தன் குவலையில் ஒரு பெண் மட்டுமே இருபது டொலர் போட்டாள் என்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. பெரிய தொகை பணத்தை அவள் தனக்கு கொடுத்த படியால் அவளிடம் அவளின் பெயர் மேரி என்று கேட்டு நினைவில் வைத்துக் கொண்டான் .
அந்த மோதிரத்தை அவளைத் தேடி அவளிடம் கொடுக்க முன் அந்த மோதிரத்தின் பெறுமதியை அறிய ஒரு நகை கடைக்குள் சென்று அதன் விலையை கடைக்காரனிடம் கேட்ட போ து ,அதை உரைத்து ,நிறுத்து பார்த்து வைரகல் பதித்து இருபதால் அதன் பெறுமதி இருபதாயிரம் டொலர் என்றான் மோதிரத்தின் பெறுமதியை கேட்டதும் கிழவன் அதிர்ந்து போனான் . தன் வா ழ் நாள் முழுவதும் பிச்சை எடுத்தாலும் கூட தனக்கு அவ்வளவு பணம் கனவிலும் கிட்டாது என்று அவன் தனக்குள் யோசித்துக் கொண்டான்
“ என்ன இதை இந்த தொகைக்கு விற்க உனக்கு சம்மதமா”? நகை கடை க்காரன் கேட்டான்.
கிழவன் சற்று சிந்தித்தான் “ இதை கடை க்காரன் சொன்ன விலைக்கு விற்றால் தான் இனி பிசைச் எடுக்கத் தேவையில்லை . விரும்பியதை வாங்கி சாபிடலாம் . தெரு ஒரத்தில் குளிரில் படுக்க தேவை இல்லை. அவன் மனம் பேதலித்தது . பதில் சொல்லாமல் நின்றான் . கடைகரனுக்கு தெரியும் அந்த மோதிரத்தின் பெறுமதி தான் சொன்ன தொகையை விட அதிகம் என்று.
“ சரி இன்னும் ஐயாயிரம் கூட்டித் தருகிறேன் மோதிரத்தை விற்கிறாயா”?கிழவன் ஒரு முடிவுக்கு வந்தான் .இந்த மோதிரம் அந்த நல்ல ஈர மனம் படைத்த மேரியை போய் சேர வேண்டும் . அவளை எப்படியும் தேடி கண்டுபிடித்து இந்த மோதிரதை அவளிடம் கொடுக்க வேண்டும். மோதிரத்தை விற்பதில்லை என முடிவெடுத்தான் . கடைககாரனுக்கு பதில் சொல்லாமல் மோதிரத்தோடு கடையை விட்டு வெளியேறினான் “.
அந்த பிச்சைகரக் கிழவன் எப்படியும் மேரியை கண்டு பிடித்து மொதிரதை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவன், மேரி என்ற பெயர் உள்ள பெண்ணை கேட்டு ஏறி இறங்காத வீடுகள் இல்லை. அவன் தேடிய மேரி கிடைக்கவில்லை . அவள் சொன்ன பெயரை வைத்து எப்படி கண்டு பிடிப்பது என்று அவன் யோசித்த போது அவனுக்கு அவள் அணிந்து இருந்த ஆடையில் இருந்த ஒரு சின்னமும் பக்ஸ்டர் எச்போர்ட்ஸ் என்ற பெயரும்அவனின் நினைவுக்கு வந்தது , ஒருவேளை அவள் வேலை செய்யும் பக்ஸ்டர் நிறுவனம் அவளுக்கு கொடுத்த ஆடையாக இருக்கலாம் . அந்த நிறுவனத்தை கண்டு பிடித்தால் அவளை கண்டு பிடித்து மோதிரத்தை அவளிடம் கொடுப்பது இலகு என்ற முடிவுக்கு அந்த கிழவன் வந்தான் . அந்த நிறுவனம் அவன் பிச்சை எடுத்த இடத்தில் இருந்து வெகு தூரத்தில் இருக்கவில்லை . பாதையில் நின்ற போலீஸ்காரனிடம் அந்த நிறுவனத்துக்கு போகும் வழியை கேட்டான் . போலீஸ்காரன் காட்டிய வழியே சென்று அந்த நிறுவனத்தை அடைந்தான் .
****
அது ஒரு மூன்று மாடிக்கட்டிம். கட்டத்தின் வாசலில் பக்ஸ்டர் எச்போர்ட்ஸ் என்ற பெயர் பலகை இருந்தது . அழுக்கு நிறைந்த கிழிந்த ஆடையுடன்
நிறுவனத்துக்குள் செல்ல முயன்ற அந்த பிச்சைக்காரனை செக்கியூரிட்டி தடுத்தி நிறுத்தினான் ,
“ஏய் நீ ஆர் , என்ன வேண்டும் இங்கை உனக்கு “ செக்கியூரிட்டி கேட்டான் .
“இங்கு வேலை செய்யும் மேரி என்ற உயரமான பெண்னை நான் அவசரமாக பார்க்க வேண்டும்”
“ மேரி என்பவள் இந்த நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரி அவளை எல்லாம் உன்னால் பார்க்க முடியாது” செக்கியூரிட்டி கடும் தொனியில் சொன்னான்
“ மேரி என்ற பெண் இருபது டொலர் பிச்சை போட்ட பிச்சைக்காரக் கிழவன் அவளை சந்திக்க வந்திருக்கிறான் என்று சொல் அப்போது அவளுக்கு புரியும்”
“ஏன் மேரி உனக்கு தந்த இருபது டொலரை அவவுக்கு திருப்பி கொடுக்க வந்திருக்கிறயா”‘?. செக்கியூரிட்டி கேட்டான்
“ இல்லை அதை விட அவள் தொலைத்த மதிப்பு உள்ள பொருள் ஒன்றை அவளுக்கு கொடுக்க வந்திருக்கிறன் என்று சொல் . மேரிக்குப் புரியும் “ என்றான் கிழவன் .
செக்கியூரிட்டிக்கு அவன் சொன்னது புரியவில்லை . அவன் அங்கிருந்த வரவேற்பாளராக பணி புரியும் பெண்ணிடம் கிழவன் வந்த விசயத்தை சொன்னான். அந்த பெண் மேரியுடன் தொடர்பு கொண்டு தாடி மீசை வைத்த
கிழவன் ஒருவன் மேரி தொலைத்த பொருளை அவளிடம் கொடுக்க வந்திருப்பதாக சொன்னாள்.
சில நிமிடங்களில் மேரி கீழே வந்தாள்.
கிழவனை கண்டதும் “ஹலோ ஓஜிமா. என்ன இந்த பக்கம் . ஏதாவது முக்கிய விஷயமாக என்னை சந்திக்க வந்தாயா “? மேரி கேட்டாள்.
“ மேரி, என் குவலைக்குள் நீர் போட்ட இருபது டொலர் நோட்டுடன் இந்த மோதிரம் இருந்ததை கண்டு எடுத்தேன். இது உம்முடைய மோதிரமா என்று பார்த்து சொல்லும்” என்று தன் கோட் பாக்கெட்டுக்குள் இருந்து மேரியின் மோதிரத்தை எடுத்து கிழவன் அவளிடம் கொடுத்தான் ,தான் தொலைத்த மோதிரம் தன்னிடம் திரும்பி வந்ததை கண்டு மேரிக்கு பெரும் மகிழ்ச்சி.
ஓஜிமாவை இறுகக் கட்டிப் பிடித்துபடியே “ இப்படி ஒரு நேர்மையான ஒருவரை நான் இதுவரை காணவில்லை . என் பெற்றோரை இழந்த எனக்கு ஒரு டடி கிடைத்து விட்டார் . இனி நீங்கள் பிச்சை எடுக்க தேவையில்லை . என் வீட்டையும் தோட்டத்தையும் கவனித்து கொள்ளுங்கள், என் வீட்டில் உள்ள அவுட் கவுசில் தங்கலாம் . உங்களுக்கு சாப்பாடு ஆடை என் பொறுப்பு ” என்று தனது நன்றியை ஓஜிமாவுக்கு மேரி தெரிவித்தா ள். ஓஜிமாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது.
****
(யாவும் புனைவு )
![]()