சிங்கப்பூரில் சிலகாலம்!…. 36 ….. ஏலையா க.முருகதாசன்.

நானும் யோகமலரும் சோபாவில்;; உட்கார்ந்திருந்தம்.யோகமலர் எதுவுமே பேசாது அமைதியாக உட்கார்ந்திருந்தது எனக்கு என்னமோ போலிருந்தது.
அவளின் தோளில் கையைப் போட்டு ஆதரவாக அவளை எனது நெஞ்சோடு அணைத்து வைச்சுக் கொண்டிருந்தன்.அவளின் தலையை வருடிக் கொடுத்தபடியே „ உடம்புக்கு ஏதாவது செய்கிறதா’ என்றன். „ ஒன்னும் இல்லீங்க பயமா இருக்கதுங்க’ என்றாள். „எதுக்கு பயம் „ என்றன்.பதில் சொல்லாமல் எனது மடியில் படுத்தாள்.
யோகமலர் படபடப்பாக இருக்கிறாள் என்பது ,அவளின் உடல் மெதுவாக நடுங்கியதிலிருந்து புரிந்து கொண்டன்.
பணிப் பெண்கள் கொண்டுவந்து வைச்சுவிட்டுப் போன கோப்பி தேத்தண்ணி கேக் எல்லாம் சாப்பாட்டு மேசையில் அப்படியே இருந்தன.
„தேத்தண்ணியும் கோப்பியும் ஆறப் போகுது வாங்க போய்க் குடிப்பம் „ என்ற நான் „இல்லை வேண்டாம் நானே எடுத்துக் கொண்டு வந்து தருகிறன் „என்று சொல்ல எனது மடியிலிருந்து எழுந்தவள் சோபாவில் சாய்ந்து கொண்டாள். நான் எழுந்து போய் இரண்டு சிறிய தட்டுகளில் கேக் துண்டுகளையும் தேத்தண்ணி பிளாஸ்க்கையும் கோப்பி பிளாஸ்க்கையும் எடுத்துக் கொண்டு வந்து சோபாவிற்கு முன்னாலிருந்த சிறிய உயரமில்லாத மேசையில் வைச்சுவிட்டு கேக் துண்டுகளை வெட்டி சிறிய இரண்டு பிளேட்டுகளில் வைத்து நான் ஒரு பிளேட்டை எடுத்துக் கொண்டே மற்றதை அவளிடம் கொடுத்தன்.
அதை வாங்கிக் கொண்ட அவள் கேக்கைச் சாப்பிடுவாள்தானே என நினைச்சு எனது பிளேட்டிலிருந்த கேக் துண்டொன்றினை எடுத்து சாப்பிடுவம் என்று எனது வாய்க்கருகில் கொண்டு போய்க் கொண்டே அவளைப் பார்த்தன், அவள் சாப்பிடமால் கைகளால் பிளேட்டைப் பிடித்தபடியே என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இவள் ஏன் இன்று இப்படிச் சோர்ந்து போயிருக்கிறாள் என்று பதட்டப்பட்ட நான், கேக்கைச் சாப்பிடாமல் கையில் எனது பிளேட்டை வைச்சிருந்தபடியே’ ஏன் சாப்பிடேலை „ என்று கேட்க எதுவுமே பேசாது
பிளேட்டை ஒரு கையால் பிடிச்சபடி மறுகையால் எண்ணை அணைச்சபடி என் மார்பில் தலை வைச்சாள்.
அவளின் கேக் பிளேட்டை வாங்கிய நான் எனது பிளேட்டை எட்டி சிறிய மேசையில் வைச்சுவிட்டு அவளுடைய பிளேட்டிலிருந்த கேக்கை பிய்ச்செடுத்து ஒரு குழந்தைக்கு தீத்துவது போல அவளின் வாய்க்குள் வைச்சன்.
கேக்கைச் சாப்பிட்டவளுக்கு புரைக்கேற இருமினாள்’அப்பா அம்மா அண்ணன்மார் அண்ணிமார் நினைக்கிறாங்களோ „ தெரியாது என்றவளின் உச்சந்தலையைத் தட்டிக் குடுத்தன்.சிறு சிறு துண்டுகளாகப் பிய்ச்சு அவளின் வாய்க்குள் வைச்சுக் கொண்டேயிருந்தன்.
என்னைப் பார்ப்பதும் கேக்கைச் சாப்பிடுவதுமாக இருந்தவள்’ ரீ தாங்க’ என்றாள்.தேத்தண்ணி இருந்த பிளாஸ்கிலிருந்து தேத்தண்ணியை கப்பில் ஊற்றிக் குடுக்க அதை வாங்கி அமைதியாகக் குடிச்சவள்’ இப்ப என்னங்க நேரம்’ என்றாள்.
„நேரம் காலமை பத்தரை மணி’ என்றன்,மனதுக்குள் கணக்கு பண்ணியவள் „இன்னும் எட்டு மணித்தியாலம் இருக்குங்க’ என்றாள்.
„எதுக்கு’ என்று தெரியாத மாதிரி கள்ளச் சிரிப்புடன் கேட்க’ ஏங்க உங்களுக்குத் தெரியாதா, நடிக்காதீங்க „ என்றவளின் முகம் சிவக்கத் தொடங்கியது .
அவள் தாலி கட்டுவிக்கப் போற நேரத்தைத்தான் சொல்கிறாள் என்று தெரிஞ்ச போதும் அந்த நேரத்தை நினைச்சு நானும் படபடப்பாகத்தான் இருந்தன்.
அப்படி நடப்பது என்பது ஒரு திரைப்படத்தின் காட்சியல்ல.ஒருத்திக்கு தாலிகட்டி வாழ்ந்து கொண்டு இன்னொருத்திக்கு தாலிகட்டுவது என்பது சாதாரண விடயமல்ல.மனச்சாட்சி போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தது.
காதல் என்பதில் காமமும் கலந்துதான் இருக்கும்.அவள் மேல் எனக்குக் காதல் இருந்தது உண்மைதான்.ஆனால் அதில் காமம் இல்லை என்று சொல்ல முடியாது..நீண்டகால உடல் தவிப்பு அவளை அரவணைச்சு இருப்பதை விரும்பியது.
என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் வழமைக்கு மாறாக நானும் அமைதியாகவே இருந்தன்.
மனச்சாட்சியின் இடித்துரைப்பும்,எல்லாம் அவன் எழுதி வைச்சபடிதான் நடக்கும் என்ற விதிவிட்ட வழியில் போவது என்ற முடிவும், காதலும் காமமும் கலந்த மனம் உடல் சார்ந்த தேவையுமாக நான் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தன்,தவிச்சுக் கொண்டிருந்தன்.
நான் அமைதியாக இருப்பதைக் கண்ட அவள் „ ஏங்க ஒண்ணுமே பேசாம இருக்கீங்க பயமா இருக்குங்க’ என்றவளுக்கு „ச்சா அப்படியொன்றுமில்லை….’ என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு கேக்கை தீத்திக் கொண்டேயிருந்தன்.
அவள் தேத்தண்ணியைக் குடிப்பதும் கேக்கைச் சாப்பிடுவதுமாக இருந்தாள்.கப்பில் இருந்த தேத்தண்ணி முடிஞ்சு போக வார்த்துக் குடுத்துக் கொண்டேயிருந்தன்.
இரண்டாவது கப் தேத்தண்ணியைக் குடிச்சு,கேக்கையும் சாப்பிட்டு முடிச்சவள் மீண்டும் கால்களை முடக்கி என் மடியில் படுத்தாள்.
நான் எனது கைகள் இரண்டையும் தலைக்குப் பின்புறமாக கட்டிக் கொண்டு சோபாவில் தலையைச் சாய்ச்சு வைச்சபடி மேலே கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தன்.
அவள் எனது மடியில் கண்ணை மூடிப் படுத்திருந்தாள்.நான் சிங்கப்பூரில் சாய்ச்சி என்ற இடத்தில் ஒரு வசதியான கொட்டலில் அதவும் முதலிரவுக்கென்று ஒழுங்கமைப்பட்ட ஒரு வீடு போன்ற அறையில் இன்னொரு மனைவியுடன் இருக்கிறன்.
ஊரில் எனது மனைவி இந்த நேரம் மட்டுமல்ல எந்த நேரமும் எனது யோசனையுடனேயே இருக்கிறாள்.இரவு பகலாக வீடு நிறைய தாய் தகப்பன் சகோதரங்கள் பேரன் என எல்லாரும் எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் காவலரண் போல இருந்தாலும்,இப்ப என் கணவர் என்ன செய்து கொண்டிருப்பார் என்றும்,
வெள்ளிக்கிழமைகளில் சிலோன் வீதியில் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு போவதாக கடிதங்களில் எழுதுபவர்,இந்த நேரம் அங்கு போயிருப்பாரோ என யோசித்துக் கொண்டிருப்பாளோ,பிள்ளைகள் அப்பா எப்ப திரும்பி வருவார் என்று கேட்டுக் கொண்டிருப்பார்களோ, இல்லாட்டி „ உன்ரை மனுசன் அங்கை ஒரு சீனத்தியைப் பிடிச்சிடுவாரடி „ என்று என்னுடைய மனைவியின் சிறிய தாயார் எப்பொழுதும் மனைவியைச் சீண்டுவாரே அப்படிச் சீண்டியிருப்பாரோ….’ என யோசித்த நான் „சீனத்திக்குப் பதிலாக ஒரு இந்திய வம்சாவழி மலேசியத் தமிழப் பெண் என்
வாழ்க்கையில் இணைஞ்சிருப்பதை எண்ணி சிறிய தாயாரின் வாய்ச்சொல் உண்மையாகிப் போனதை நினைச்சுக் கொண்டன்.
எல்லாவற்றையும் நினைக்க நினைக்க கண்கள் கலங்கத் தொடங்கியது.ஆழமாக பெருமூச்சு விட்டபடி உடம்பை பின்னுக்கு இழுத்து சோபாவோடு உடம்பை நிமிரச் செய்து உட்கார்ந்த போது கவிழ்ந்த முகத்திலிருந்து கண்ணீர் ஒருக்களித்து எனது மடியில் படுத்திருந்த அவளின் வலது பக்கத்து கன்னத்தில் விழுந்திருக்க வேண்டும், கண்ணீரின் சூடு அவளைத் துடித்தெழ வைச்சுவிட்டது.
துடிச்செழுந்தவள் என்னுடைய தன்னுடைய விரல்களால் கண்களைத் துடைச்சபடியே’ என்னங்க அக்காவை நினைச்சு கண்கலங்கிறீங்களா, அழாதீங்க,கவலப்படாதீங்க நானோ நீங்களோ தப்புச் செய்யேலங்க,அக்கா இல்லாத இடத்தில நீங்க இங்க இருக்கிறவரைக்கும் உங்க மனைவியா வாழப் போறேங்க,நீங்க ஊருக்குப் போறப் போ,நான் இங்க உயிரோட இருக்க மாட்டேங்க…கவலைப் படாதீங்க..நான் என்னங்க செய்யிறது…..ஜி இல உங்களப் பார்த்ததும் உங்கள யாரென்னு தெரியாமலே உங்கள்ள காதல் வச்சுதுங்க…..உங்களோட வாழன்னுமுன்னு ஆசைப்பட்டேங்க நீங்க தமிழ்ன்னு தெரிஞ்சப்புறம் நான் மகிழ்ச்சியானேங்க…நீங்க மறி பண்ணினவர்னு தெரிஞ்சப்புறமும்கூட அது என்னப் பாதிக்கல…கொஞ்ச நாளாவது உங்ககூட வாழனும்னு உறுதியா நினைச்சன்.அந்த கொஞ்ச நாள் வாழ்க்கைக்குப் பிறகு நீங்க ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு முன்னாடியே உங்க மடியில நான் இறந்திடனும்னு ஒவ்வொரு நாளும் மாரியம்மனை வேண்டுவேணுங்க……கவலைப் படாதீங்க, இதுதான் நம்ம விதிங்க என்று எனது நெஞ்சிலே தலைவைச்சபடி விட்டு விட்டுச் சொன்னவள் சல்வார் கம்மீஸ் சால்iயால் எனது கண்களைத் துடடைச்சவள்,என்னுடைய முகத்தையும் துடைச்சுவிட்டாள்.தன்னுடைய முகத்தையும் துடைச்சாள்.
அப்பொழுது அங்கிருந்த தொலைபேசி மணி அடிக்கவே, நான் எழுந்து போக எத்தனிக்கையில் „ இருங்க நான் பேசிறன்’ என்றவள் எழுந்து போய் தொலைபேசியை எடுக்கிறாள்.மறுமுனையிலிருந்து முதலில் ஆங்கிலத்தில் பேசிய பெண் பிறகு தமிழில் ஏதோ சொல்வது தமிழ் ஒலித்தொனியிலிருந்து உணர முடிஞ்சுது,யோகமலர் பதிலுக்கு „யா…என்றும் „ஆமாங்க’ ஓகே… நாங்க இருபது நிமிசத்துல சொல்றம்.. ஆமா அவரு சிறீலங்காவுங்க யாழ்ப்பாணம்ங்க …நீங்க எப்படிக் கண்டு
பிடிச்சீங்க…ஓ…அப்படியா ….கப்பிங்க…தாங்யூ…பை பை’ என்றவள் தொலைபேசியை வைச்சுவிட்டு எனக்கருகில் உட்கார்ந்தவள்;, „என்னோட பேசினவங்க உங்க ஊர்தாங்க,அவங்க ஒரு ரிசப்சனிஸ்ட் காலைல உங்கள பார்த்தாங்களாம் பார்த்தவுடனேயே நீங்க சிறீலங்காவுன்னு கண்டு பிடிச்சிட்டாங்களாம்….அவங்க என்ன சொன்னாங்கன்னா …அங்க அந்த ரேபில்ல ஒரு ஸ்பெசல் மெனுகார்ட் இருக்காம்…..ஸ்பெசல் சாப்பாடு வேணும்னா அதைப் பார்த்து ஓடர் பண்ணனுமாம் …இல்லைன்னா பொதுவான விதம் விதமான லஞ்சதான் கண்ரீன்ல இருக்குமாம்….என்னங்க ஓடர் பண்ணுவோமா இல்ல ..வெரைட்டியா சாப்பிடுவோமா…அவங்களுக்கு சொல்லனும்னு „சொன்னாள்.
„இண்டைக்கு விதம் விதமாகச் சாப்பிடுவம் „நாளைக்கு ஓடர் பண்ணிச் சாப்பிடுவம் உங்களுக்கு அது விருப்பமா’ என்று கேட்க,’ஆமாங்க அதுதான் எனக்கும் விருப்பம் என்றவள், எழுந்து போய் தொலைபேசியை எடுத்தவுடன்’யா பிளீஸ்’என்ற குரலின் தொனியைக் கொண்டு தமிழ் ரிசப்சனிஸட் என்றறிந்தவள் ‘ நாங்க ஓடர் பண்ணலைங்க,தாங்யூ பை ..பை….’ என்று சொல்லிவிட்டு தொலைபேசியை வைச்சவள்’ நீங்க குளிக்கலையா’ என்று கேட்டாள்’ பிறகும் குளிக்கத்தானே வேணும்’ என்று நான் சொல்லி முடிக்கமுந்தி’நீங்க உங்க பூன்லே றைவ் வீட்ல காலைல மூணு மணிக்கு குளிச்சிருப்பீங்க நான் இரண்டு மணிக்கு குளிச்சேங்க, நான் குளிக்கப் போறன் ,நான் குளிச்சு முடிச்சாக்கப்புறம் நீங்க குளிங்க,யோசிக்காதீங்க எங்க இரண்டு பேரையும் சேர்த்து வைச்சது விதிங்க’ என்றவள் உற்சாகமாக படுக்கை அறைக்குப் போனவள்,அங்கிருந்து துவாயை
எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் போக நான் றிமோட் கொண்ரோலை எடுத்து அழுத்தி ஒரு சீன நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினன்……
„போய்க் குளிங்க’ என்று சொன்னவளைத் திரும்பிப் பார்த்தன்…அவள்….
(தொடரும்)
![]()