நிகழ்வுகள்

மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகத்தின் 10 வருட பூர்த்தியும், கிரிக்கெட் கொண்டாட்டமும்..! நூருல் ஹுதா உமர்.

காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகம் ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவு பெறுவதை சிறப்பிக்குமுகமாக அக்கழகத்திலுள்ள அனைத்து வீரர்களையும் மூன்று அணியாகப் பிரித்து அணிக்கு 08 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி கமு/ அல் அஷ்ரப் மகாவித்தியால மைதானத்தில் இடம்பெற்றது.

இத் தொடரில் மாவடி லெஜன்ட், மாவடி மாஸ்டர், மாவடி ஹில்ஸ் ஆகிய பெயர்களைக் கொண்ட 3 அணிகள் பங்கு பற்றி இறுதிப்போட்டிக்கு மாவடி மாஸ்டர் அணியும், மாவடி லெஜன்ட் அணியும்  தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டியில் மாவடி லெஜன்ட் அணியினர் வெற்றிவாகை சூடினர்.

இப் போட்டிக்கு பூரண அனுசரனை வழங்கிய காரைதீவுப் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாவடி லெஜன்ட் அணியினருக்கு கிண்ணத்தினை வழங்கியதுடன், இரண்டாம் இடத்தினைப்பெற்ற மாவடி மாஸ்டர் அணியினருக்கும் மாவடிப்பள்ளி விளையாட்டுக் கழகநிர்வாகிகளினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *