கட்டுரைகள்

மொழிகளில் எதுவும் காட்டுமிராண்டி மொழியல்ல,மொழிகளின் தோற்றுவாய் குரலொலிகளே!…… ஏலையா க.முருகதாசன்.

மொழி என்றால் அதன் தோற்றுவாய் ஒலிதான்.மனிதனால் அவன் குரல்வழி நாணில் தோன்றி நாவினாலும்,பற்களாலும்,;,மேல்வாய் ,கீழ்வாய், இதழ்கள் வழியாகச் செப்பனிடப்பட்டு வாய்வழியே வெளிவருவதுதான் மொழிகள்.

மொழிகள் உச்சரிப்பு வழியாக வேறுபடுபவன.மொழிகள் என்பது ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்வதற்கான ஊடகம்.

மழை,பெரும் காற்று, நெருப்பு என்பவற்றினை அறிவிப்பதற்காக வித்தியாசமான குரல் எழுப்பி அவற்றை உணர்த்திய காட்டு மனிதன்தான்;,அவனோடு காட்டிடை வாழுகின்ற பறவைகள்,மிருகங்கள்,ஊர்வன போன்றவற்றின் வேறுபாடுகளையும் வௌ;வேறு குரலொலி எழுப்பி தனது சகாக்களுக்கு அறிவித்தான்.

காட்டோடு இணைந்த அவனது வாழ்வில், அங்கிருந்த மரங்களின் ,கொடிகளின் வேறுபாடுகளையும், அருவிகள், குளங்கள், நீரோடைகள் போன்றவற்றின் வேறுபாடுகளையும், உண்ணத்தகுந்த காய்கறிகள், கிழங்க வகைகள்,பழங்கள் என்பவற்றினை உண்டனுபவித்து அவற்றின் வேறுபட்ட சுவைகளை உணர்ந்தது மட்டுமல்ல,தான் உண்டவற்றில் எது தனது உடலுக்கு உகந்தது எது ஒவ்வாதது என்பதையும், நஞ்சுத் தன்மை கொண்ட காய்கறி,கிழங்கு வகைகளை உண்டு இறந்த தனது சகாக்கள் ஏன் இறந்தார்கள் என்பதைக் கண்டறிந்த அவன் உண்ணத் தகுந்தது என்பவற்றுக்கும் உண்ணக்கூடாது என்பவற்றுக்கும் குரலொலி எழுப்பி எச்சரிக்கை செய்தான்.அது போன்று கொடிய விலங்குகளிடமிருந்து தனது உயிரையும் சகாக்களின் உயிரையும் காப்பற்ற,விலங்குகளின் கொடுந்தன்மைக்கேற்ப குரலொலிகளில் வித்தியாசத்தை காட்டி உணர்த்தினான்.

தனது இனக்குழுமம் வாழ்ந்த இடத்துக்கு வேறொரு இனக்குழுமம் வரும்போது, மரங்களில் ஏறி கண்காணிப்பை செய்து அதற்கென்றும் தனிக்குரல் எழுப்பி எச்சரிக்கை செய்தான்.காட்டு மனிதன் தன்னைச் சுற்றியுள்ள அனைத்துக்கும்,அவற்றின் தேவை நோக்கில் வேறு வேறு குரலொலிகள் எழுப்பி உணர வைத்தான்.அதுதான் அவனுடைய ஊடகம்.

காட்டு மனிதன் ஊடகமாகப் பாவித்ததும் குரலொலிதான்,உலக மாந்தர் வேறு வேறு ஒலிகளை எழுப்பி அவற்றை தமக்கான மொழியாக்கி, அந்தந்த மொழிகளுக்கு வேறு வேறு எழுத்து வடிவங்களை கொடுத்து கணிணியுகம் வரை அவை நிலைத்து நின்று இனங்களின் முகவரியாய்,ஒவ்வொரு இனத்தையும் மொழி வாரியாக இனங்காட்டி நிற்பதற்கும் குரலொலியே காரணமாகின்றது.

காட்டு மனிதனும் குரலொலியை எழுப்பி தனது உணர்வுகளை சகமனிதனுக்கு உணர்த்தியது போலவே இன்றைய நவீன மனிதனும் குரலொலி எழுப்பியே சக மனிதனுக்கு தனது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறான். உலகில் பல இலட்சம் குரலொலிகள், அவரவர் இனக்குழுமங்கள் சார்ந்து எழுந்த போதும் அவற்றிக்கான எழுத்து வடிவங்களை அவை பெறவில்லை.

இன்றைய உலகில், ஒரு பொருளை பல்லினம் சார் அனைவரும் ஒரே விதமான குரலொலி எழுப்பி அவற்றை இனம் காட்டுவதில்லை.

உதாரணமாக,தமிழர்கள் „மரம்’ என்று சொல்லும் பொருளை,ஆங்கிலேயர் „றீ’ என்கிறார்கள்.ஜேர்மனியர்கள் „பவும்’ என்கிறார்கள்.இந்த வேறுபாட்டினைக் காண்பிப்பது குரலொலியேதான்.

மொழி ஒரு நீடசி,அது குரலொலியைக் குறிக்கும், குரல் வழியாக எழுப்பப்படும் வேறு வேறு குரல் ஒலிகள் வேறு வேறு பொருட்களின் வேறுபாட்:டை உணர்த்துவதும்,அவற்றுக்கு எழுத்துரு கொடுக்கப்படுதலும் மொழி என்ற குரலொலிக்கே என்பதுதான் உண்மையிலும் உண்மை.

எனவே காட்டு மனிதனின் ஊடகமும் குரலொலிதான், இன்றைய நவீன மனிதனின்

ஊடகமும் குரலொலிதான்.

ஆகையால் தந்தை பெரியார் சொன்னது போல தமிழ்மொழி காட்டுமிராண்டிகளின் மொழியே அல்ல.மொழியென்றால் குரலொலி வழி வந்தது என்பதே உண்மையாகையால், தந்தை பெரியாரின் கூற்றுத் தவறானதே.

இதுவரையும் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டு வருகையில் மொழி என்ற ஒரு கட்டமைப்புக்குள் தம்மை இணைத்து வாசித்தலும், வாசிக்கும் போது எண்ணங்களாகி அவை சிந்தனையாகும் போது குரலொலி என்பதை கணக்கிலெடுக்காது இத்தர்க்க ரீதியான,இயல்பு நிலை சார்ந்த ஆய்வினைக் கவனத்தில் கொள்ளாது,மொழி சார்ந்த சிந்தனையும் ஒரு தமிழராக தமிழ்மொழி சார்ந்த சிந்தனையும், தமிழ் மொழிக்கு எழுத்துரு இருக்கின்றதே என்று எண்ணம் வாசிக்கும் ஒருவருக்கு ஏற்படுவதும் வேறுபட்ட குரலொலிகள்தான் இனக்குழுமங்கள் சார்ந்த அவரவருக்கான மொழியாக உருவெடுத்தன என்பதை கவனத்தில் கொள்ளாதிருப்பதும் இயல்பானதே.

இன்னும், வாசிக்கும் ஒருவர் மொழிகளுக்கான எழுத்துருவை மட்டுமே கணக்கிலெடுத்து; குரலொலி சார்ந்த மொழியின் ஆரம்ப தோற்றுவாயைத்; தனக்குள் கவனச் சிதறலுக்கு உட்படுத்திவிடுவார்.

இன்று நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மொழிகளுமே குரலொலிகள்தான்.அந்தந்த இனம் சார் அறிஞர்களாலும்,மொழி

வல்லுனர்களாலும், வௌ;வேறு பொருட்களை சுட்டி நின்று எழுப்பிய குரலொலிகளுக்கு வேறு வேறு எழுத்து உருவங்களைக் கொடுத்து, மொழி என்றால் குரலொலியில் தோன்றி, சுட்டிநிற்றல் காரணத்தால் அதற்கான எழுத்து வடிவம் போன்றவற்றின் படிமுறைப் படிவங்களை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஓவ்வொரு மொழியும் வேறு வேறான குரலொலியுடையவையாக இருப்பது மட்டுமல்ல,அந்தந்த மொழிகளும்,பலகோடி பொருட்களை தத்தமது மொழி வழியாக வேறு வேறு குரலொலி எழுப்பி சுட்டி நிற்கின்றன.

குரலொலி வாயிலாக மொழிகளின் ஒலி வேறுபாட்டினை உணர்ந்து கொள்ளும் மூளைக்கலங்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்கின்றன.

மூளைக்கலங்கள் மொழியொலியின் தன்மை, உட்செறிவு,சுட்டிநின்றலின் வேறுபாடு ஆகியவற்றை உள்வாங்கிய நரம்புகள், அதிர்வுகள் ஊடாக தொண்டைக்குழியிலிருக்கும் குரலொலி நாண்களை அதிரச் செய்ய,அந்த அதிர்வு வாய்வழியாக வெளிப்படும் போது, வாய்க்குள் இருக்கும் நாக்கு மேல்வாய் கீழ்வாய், நாக்கு நுணிக்கெதிர்ப்பக்கமாக மேல்வாயினையும் உள்பற்களையும் தொட்டு, மாத்திரை என்ற எழுத்துக்களின் கூட்டுத்தன்மைக்கேற்ப எழுத்துக்களைச் சொல்லும் கால அளவுக்கேற்பவும் சொற்களின் குரலொலி வடிவமைப்புக்கேற்ப தானாக குரலொலி வெளியே வரும் போது வாயின் கதவுகளாக இருக்கும் இதழ்களை நரம்புகள் இயக்க குரலொலிக்கேற்ப மூடியும் திறந்து சொல் விளித்தலை ஏற்படுத்துகிறது.இந்தச் சொல் விளித்தலே ஊடகமாக மாறி உரையாடலாக இடம்பெறுகின்றது.

சொற்கள் என்பன எழுத்துக்களினால் உருவாக்கப்பட்டவையே.ஒவ்வொரு எழுத்துக்கும்,எழுத்துச்சரிப்பின் மிக நுண்ணிய கால அளவக்கேற்ப குரல் நாண் ஒலிக்க வைக்கப்படுகின்றது.

இது உடல்சார்ந்த வேதியல்பாடு.மூளைக்கலங்கள் நரம்பதிர்வு வழியாக குரல் நாண்களுக்கு பலகோடி அதிர்வுப் புள்ளிகளை ஏற்படுத்துவதை, தொலைக்காட்சி என்ற இயற்பியல் செயல்பாட்டு வழியாக உணர்த்த முடியும்.

புள்ளியிடல்(னுபைவையடஃடிஜிற்றல்) தொலைக்காட்சிகளின் திரையில் ஒரு காட்சியினைப் பார்க்கும் போது, காட்சிப்படுத்தப்பட்ட பொருள்கள் யாவும் தெரிவதற்குக் காரணம் பல இலட்சம் புள்ளிகளின் கூட்டுத்தன்மையேயாகும்.அது போன்றே,ஒவ்வொரு எழுத்துக்களும் பலவாயிரம் கோடி அதிர்வுகளால் உருவாக்கப்பட்டு வாய்வழிச் சொற்களாக மாற்றப்படுகின்றன.

இது இயற்கை கொடுத்த கொடையாகும.; எனவே குரலொலிதான் மொழியாக மாறியது என்பதுதான் உண்மையாகும். பல இலட்சம் மொழிகளில் காலப்போக்கில் அழிந்து போனவை போக, இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளில் எழுத்து வடிவில்லாத மொழிகளைப் பேசுகின்ற, உதாரணமாக

இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல காட்டு மனிதர்கள்; ஊடகமாக தமக்கென்று பயன்படுத்தும் உரையாடல்கள் சார்ந்த குரலொலிதான் அவர்களின் மொழி என்பது அறுதியானதே.

உதாரணமாக,ஒரு பேச்சாளன் ஐந்து நிமிடங்கள் பேசும் போது, பலவாயிரம் கோடி அதிர்வுகள் தொண்டைக் குழிக்குள் இருக்கும் குரல் நாண்களுக்கு ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு எழுத்துக்கும் கால அளவுக்கேற்ப அதிர வைத்து குரலொலியாக விரிவடைந்து அவன் வாய்க்குள் இருக்கும்,நாக்கு,மேல்வாய் கீழ்வாய்,பற்கள்,இதழ்கள் என்பனவற்றால் செப்பனிடப்பட்டு கேட்போரைச் சென்றடைகின்றன.குரலொலிகள்தான் மொழிகளின் தோற்றுவாய் என்ற இறுதிப்பாட்டுக்கமைய எந்த மொழியுமே காட்டுமிராண்டி மொழியல்லவென்பதும், அன்றைய காட்டு மனிதன் வாய்வழித் தொடர்பாடலுக்கு பயன்படுத்தியதும் குரலொலிதான், இன்றைய நவீன மனிதன் வாய்வழித் தொடர்பாடலுக்கு பயன்படுத்துவதும் குரலொலிதான் என்பது ஆய்வு ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் உண்மையாகும்.

 

(இந்தக் கட்டுரைக்கான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button