நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “உறவுகளுக்கு கை கொடுப்போம்” சுவிஸ் கிளை உதவி!

சிறீலங்கா அரசு மற்றும் அதன் துணை ஆயுதக் குழுக்களின் ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு “உறவுகளுக்கு கை கொடுப்போம்” சுவிஸ் கிளையால் 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம் நன்றி தெரிவிக்கிறது. வவுனியாவில் தமிழர் தாயக சங்கத்தினர் 01.10.2020 வியாழக்கிழமை அன்று 1322 நாட்கள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *