கவிதைகள்

கண்கெட்ட பின்!.. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

அழுகின்றான் அழுகின்றான்
கண்ணீர்விட்டு அழுகின்றான்
அழுகின்றான் அழுகின்றான்
வாய்விட்டவன் அழுகின்றான்

நான்காண்டுக்கு முன்சேர்த்தான்
பெற்றோரை முதியோர் இல்லமதில்
ஓராண்டிலேயே ஒரவர்பின் ஒருவராக
உலகைவிட்டு அவர்கள் சென்றுடவே

இன்று எண்ணி எண்ணி அழுகின்றான்
ஏங்கித் தவித்து அவன் அழுகின்றான்
கொரோனா வந்து கண்திறந்ததாலே
குமுறிக் குமுறி தினமும் அழுகின்றான்

கோவிலுக்கு அவன் செல்லவில்லை
கொரோனாவால் அதை மூடிவிட்டார்
கோவிலுக்கும் அவன் செல்லவில்லை
கடவுளும் அவனுக்காக கலங்கவில்லை

குடும்பம் ஒரு கோவில் என்பதன்
குணமதை அறிந்து ஒழுகிடாமல்
குடும்பமதை சிதைக்கலானான்
கோவில்சென்று துதிக்கலானான்

கொரோனாவும் வரும் முன்னாலே
அவன் கோவிலுக்கு சென்றுவந்தான்
ஒருமுறை முதியோரில்லம் சென்றால்
ஒன்பதுமுறை கோவிலுக்கு சென்றான்

ஒருமுறை சென்ற போதும் பெற்றோர்
உயிருள்ளவரை அவனை எண்ணலானார்
பலமுறை கோவில் சென்றும் என்ன பலன்
கடவுள் அவனை பரிதவிக்க விட்டாரே

தெய்வம் நின்று கொல்லும் என்றாரே
உண்மை வெறுமே நின்று கொல்கின்றாரே
என் செய்வான் ஏது அவன் செய்வான்
பெற்றோரை அவன் எங்கு காண்பான்

கொரோனா இன்று ஒழிந்து போனால்
கோவில்கள் நாளை திறந்துவிடும்
அவன் நமக்கு ஏதும் செய்யாதிடினும்
ஆராதணை சிறப்பாய் நடந்தேறும்

கொரோனா அழிந்தே போனாலும்
கூப்பிட்டால் பெற்றோரும் வருவாரோ
கண்ணிருந்தும் அவன் குருடானான்
கைதொழ வேண்டியவரை தொழாமலே!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *