கட்டுரைகள்

நவீன கைத்தொலைபேசிகள் மனிதர்களை உளவு பார்க்கும் உளவாளிகள்!… ( கட்டுரை )… ஏலையா க.முருகதாசன்

தவிர்க்க முடிந்தும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட ஈக்களாக நாம் காந்தப்புலத்தினால் இயங்கும் விஞ்ஞானக் கருவிகளுக்குள் சிக்குண்டு தவறு என்று தெரிந்தும் அறுத்துக் கொண்டு வெளிவர முடியாத இக்கட்டான நிலைக்குள் கட்டுண்டோம் சிக்குண்டோம் உழன்று கொண்டிருக்கிறோம்.

விலங்கு இனங்களில் பறவை இனங்களில் இருக்கின்ற அவற்றுக்கு பாதகம் ஏற்படுத்தாத நுண்கிருமி அது மனிதர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடியது போன்றதுதான் கொரொனொ நுண்கிருமி எனவே ஏதோ ஒரு விதத்தில் விலஙகுகளிலிருந்து பரவியிருக்க”லாம்” என சீனா நம்ப வைத்தது.

ஆனால் இந்நுண்கிருமித் தொற்று மிகத் தெளிவாக மனிதர்களை கொலை செய்வது தெரியாமலே நோயினால் மரணத்தை ஏற்படுத்துவது என்ற திட்டத்திற்கமைய ஒரு கால எல்லைவரை இத்தொற்று நீடித்திருக்கத்தக்கதாக உருவாக்கப்பட்டது என்பது மக்களின் எல்லா மட்டங்களிலும் நம்பப்படுகின்றது.

அதனால் கொரொனோ தொற்று ஏற்பட்டவுடன் அது வெறும் நுண்கிருமித் தொற்று அது வழமையான நுண்கிருமிகளுக்கு இருப்பது போன்ற கலவுருக் கொண்ட கொஞ்சம் தைரியமான யாருக்கும் அடங்காத அசுர பலம் கொண்ட நுண்கிருமி என்றுதான் உலகம் நம்பியது

நம்பியது போல நடித்த உலகம் சீனாவின் மீது ஒரு கண்ணும் அமெரிக்கா மீது ஒரு கண்ணும் யூதர்கள் மீது அகக்கண்ணும் வைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

சந்தேகப்படுதலை வெளியே காட்டிக் கொள்ளாது சீனா மீதான கோபத்தை பனிக் கோபமாக வைத்திருக்கின்றன பல நாடுகள்.

ஆனால் இந்நுண்கிருமி இயல்பான கிருமிகள் போலல்லாது இருப்பதனால் இக்கிருமியின் உடல் மின்னியல் காந்த அலைகளை கலங்களாக மாற்றியல்பு கொண்டதாக உருவாக்கப்பட்டு அதனையும் சேர்த்து இக்கிருமி ஏன் உருவாக்கப்பட்டிருக்காது என்று கேள்வி எழுகின்றது.

நுண்கிருமிக் கலங்களின் வேதியல் செயல்பாட்டோடு இயற்பியல் செயல்பாடுகளில் ஒன்றான மின்னியல் காந்தப்புலம் இசைந்து இயங்குமா என்ற கேள்வி எழும் போது அது சாத்தியப்படும் என்பதை மறுக்க முடியாது.ஏனெனில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் விசுவரூபமெடுத்த இனறைய நிலையில் இது சாத்தியப்படும்.

500 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்தோமானால் எதுவெல்லாம் விஞ்ஞானத்தால் செய்ய முடியாது என்று நினைத்தோமோ அவற்றை விஞ்ஞானம் செய்து காட்டி நிரூபித்திருக்கின்றுது.

இன்றைய விஞ்ஞானத்தின் துணையில்லாமல் எம்மால் உணராத முடியாத போதும் எம்மோடு உறவாடிக் கொண்டிருக்கும் காந்தப்புல மின்னியல் அலைகளே உலகை ஆட்டிப் படைக்கின்றன.காந்தப்புல அலைகளினால் ஒருவிதத்தில் நாம் குளித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே இன்றைய கண்டுபிடிப்புகளில் அனைத்து செயலிகளையும் உள்ளடக்கியதாகவிருக்கும் கைத்தொலைபேசிகள் மனுக்குலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கத் தொடங்கவிட்டன..

சில நவீன கைத்தொலைபேசிகளில் பாவனையாளரின் பெருவிரல் அடையாளம் பதியப்படுகின்றன.அது போல ஒருவர் நாளாந்தம் எத்தனை காலடிகள் வைத்து நடக்கிறார் என்பதை துல்லியமாகக் காட்டுகின்றன.

நாங்கள் வாங்குகின்ற கைத்தொலைபேசிகளில் எமது விருப்பத்தினை இலகுவாக ஈடுசெய்வதற்குரிய செயலிகளை வைத்திருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கிறோமே தவிர காலடிகளை கணக்கிடல் வேண்டுமென்றால் எமது உடலோடு அதற்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்பதையோ அத்தொடர்பு எப்படி ஏற்படுத்தப்பட்டது என்பதையோ நாம் கவனத்தில் கொண்டு சிந்திப்பது குறைவாகவே இருக்கின்றது.

ஒரு சிறு நகத்தினை வைத்தோ அல்லது ஒரு தலைமயிரை வைத்தோ அல்லது எழும்புகளின் சிறு துண்டை வைத்தோ இவற்றுக்குரியவர்களிகளின் தோற்றத்தையோ கண்டுபிடிக்கவல்ல விஞ்ஞானத்தால் பதியப்பட்ட கைரேகையின் வாயிலாக அக்கைரேகைக்குரியவர் யார் என்பதை கண்டு பிடிப்பது மிகவும் இலகுவானதே.

எமது உடலோடு அணமித்து நிற்கும் கைத்தொலைபேசி எவ்வாறு எமது காலடிகளை கணக்கிடுகின்றதோ அது போல எமது கைவிரல் அடையாளம் எம்மைப் பற்றிய முழுவிபரத்தையும் சேகரிக்கக்கூடிய வல்லமை உள்ளது என்பதை நிராகரிக்க முடியாது.

எமது கைரேகை பெறப்படுவது கைத்தொலைபேசி தொலையும் பட்சத்திலோ களவு போகும் பட்சத்திலோ அவற்றை இன்னொருவர் பயன்படுத்த முடியாத செயலியாக சொல்லப்பட்டாலும் அச்செயல்பாடு மட்டுந்தான் இச்செயலியில் உண்டென்பதற்கப்பால் எமது மூளைக்கலங்களுடன் தொடர்பு பட்டுள்ளதா என்பதை நிராகரிக்க முடியாது.

மனுக்குலத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கைத்தொலைபேசிகள் வழியாகவும் மின்னஞ்சல் முகவரிகள் வழியாகவும் வங்கி அட்டைகளின் இரகசிய இலக்கங்கள் வழியாகவும் பலராலும் இணைந்து செயல்படும் அறிவியலாளர்களின; ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

இரகசிய செயல்பாட்டாளர்களா செயல்பட்ட இலுமினாட்டிகள் உலகை கட்டுப்படுத்தும் செயலில் முக்கால்வாசி வெற்றியைக் கண்டதன் பின்பு அனைவரும் அறியக் கூடிய விதத்தில் தம்மை வெளிப்படுத்தி நிற்கிறார்கள்.

இனி அந்த மனுக்குலத்தை ஆட்டிப் படைப்பவர்களை எவராலுமே எதுவும் செய்து விட முடியாது என்ற நிலை உண்டு.உலக மனிதர்களின் அனைத்து விபரங்களில் அவர்களின் வயது முக்கியம் பெறுகின்றது.

எந்தெந்த நாட்டில் என்னென்ன வயதுடையவர்களிருக்கிறார்கள் என்ற விபரம் அவர்களிடம் உண்டு.

இங்கே இனி நான் குறிப்பிடுவது “இது அளவுக்குமீறிய கற்பனை என்றுகூட நினைக்கலாம்”. ஆனால் இதுவரை கொரொனா தொற்றினால் இறந்தவர்களின் விபரங்களோ அல்லது தொற்றுக்குட்பட்டவர்களின் விபரங்களோ மருத்தவர்கள் மூலமாக அறிவதற்கு முன்னரே கொரொனாவின் காந்தப்புல சமிக்ஞைகள் மூலம் கொரொனா வை உருவாக்கிய சதிக் கோட்பாட்டுக் குழுமத்திற்கு போய்ச் சேர்ந்து கொண்டேயிருக்கும் என்பது ஒருநாள் எல்லோரும் அறியும் உண்மையாகும்.

எமது கைத்தொலைபேசி செயலிகள் எம்மைக் கண்காணிக்கும் உளவுப்படைகளே.அதை வைத்திருப்பவர்கள் பூச்சி ஒன்று சிலந்தி வலைக்குள் அகப்பட்டு தம்மை விடுவிப்பதற்காக அங்குமிங்கும் உழன்று எப்படி வலைக்குள் பின்னிப் பிணைந்து அகப்பட்டுக் கொள்கின்றதோ அது போன்றுதான் மனுக்குலமும்.

கொரொனா தொற்று வந்தவர்கள் குணமடைந்தாலும் அவர்கள் கொரொனாக் காந்த அலை கொணடவர்களாக இருப்பார்களாதலால் அவர்கள் இனி தமக்கென எந்த இரகசியமற்ற இயந்திர மனிதர்களாகலாம்.

இன்னும் எமது உடலில் உள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் கைத்தொலைபேசி செயலிகள் மூலம் நோய்கிருமிகளாக மாற்றமடைச் செய்யக்கூடிய ஆபத்தான நிலை மனுக் குலத்திற்கு வரும்.

இது தொடர்பான கட்டுரை ஒன்றை சில மாதங்களுக்கு முன் தமிழ் ரைம் சஞ்சிகையிலும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்திலும் எழுதியிருந்தேன்.

கொரொனா வெறும் நுண்கிருமி மட்டுமல்ல தொற்றாளர் பற்றிய விபரங்களைச் சேர்க்கும் ஒரு மினகாந்த ஊடகம் ஆகும்.அது போல நவீன கைத்தொலைபேசிகள் மகிழ்ச்சி தரும் தொலைபேசிகள் மட்டுமல்ல வைத்திருப்பவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் உளவாளியாகும்.

இப்பொழுது கொரொனொ ஒருவருக்கு இருப்பதை அருகில் இருப்பவர் கண்டறிய ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளது.இது கொரொனாத் தொற்றாளர்களை ஒரு வலையமைப்புக்குள் கொண்டு வரும்

செயலி மட்டுமல்ல கொரொனா இல்லாதவர்களுக்கு அவர்களின் உடலில் உள்ள நன்மை கொடுக்கும் கிருமிகளை கொரரொனாக் கிருமியாக மாற்றலாம் என்பதுகூட நிகழலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button