யப்பானிய விஞ்ஞானிகளின் விபரீதச் செயல்!…( கட்டுரை ) … ஏலையா க.முருகதாசன்.

யப்பானிய விஞ்ஞானிகளின் சாதனை என்று தலைப்பிட்டு ஊடகங்களில் ஒரு செய்தி வந்தது.செய்தியை வாசித்தவுடன் நான் பிரமிப்படையவும் இல்லை, ஆகா…என்று மகிழவும் இல்லை.
ஏனென்றால் இந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கு அப்பால் உள்ள விபரீதங்கள் பல.
எதிர்காலத்தில் பெண் ஆணினுடைய உறவு இல்லாமல் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது போல ஆணும் பெண்ணின் உதவிpயல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் என்பதே.
1970 ஆண்டுகளிலும் இத்தகு ஒரு செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது.இப்பொழுது வந்திருக்கும் இந்தச் செய்திக்குப் பின்னாலிருப்பவர்கள் யப்பானிய விஞ்ஞானிகளே.
மனிதனின் தோலில் உள்ள நுண்கலங்களில் ஆண் பெண் பிரிவு உண்டென்றும் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து ஒன்றுடன் ஒன்றை சேர வைப்பதன் மூலம் இன்னொரு மனித உயிர்கலந்த உடலை உருவாக்க முடியுமென்பதே யப்பானிய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
ஆண் பெண் உடலுறவு மூலம் ஆணின் விந்தும் பெண்ணின் கருமுட்டையும் சேரும் போது உருவாகும் உயிர்கலந்த உடலுக்கு இனிவருங்காலத்தில் ஆணின விந்தோ பெண்ணின் கரு முட்டையோ தேவையில்லையென்பதே இக்கண்டு பிடிப்பின் முடிவாகும்.
அத்துடன் மரபணுக்கள் என்று சொல்லப்படுகின்ற உடல் நுண்கலங்களில் காணப்படும் பரம்பரை சார்ந்த நோய்கள் போன்றவற்றைக்கூட இல்லாது செய்து எவ்வித பரம்பரை நோயுமற்ற உயிர்கலந்த உடலை உருவாக்கிவிடலாம் என்பதுகூட ஆராயப்பட்டிருக்கின்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓரே முகம் உட்பட ஒரே உடலமைப்புக் கொண்ட மனிதர்களை, அனைவருக்கும் ஒரேவிதமான குணங்களைக் கொண்ட மனிதர்களை மரபணு ஒட்டுதல் மூலம் உருவாக்கிவிடலாம் என்ற கோணத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை மனித குலத்திற்கு தீங்குஎ விளைவிக்கும் என்பதற்கமைய அவ்வாராய்ச்சி ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
பூமியிலிருக்கும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் வேற்றுக்கிரகங்களில் இருக்கின்றதா என்பதில் மனித உடல் தோற்றத்திலும் இருக்கிறார்கள், வேறு வேறு தோற்றத்திலும் இருக்கிறார்கள்
என்று கிரகங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கிரகங்களின் நிலம்சார் நிலையிலும், அவைக்கமைவான வேறுபல உயிர்களின் தோற்றத்துக்குரிய காரணிகள் ரீதியாக நம்புகின்றனர்.
சூரியக் குடும்பத்திலுள்ள, பூமிக்கும் மற்றை கிரகங்களுக்குமிடையிலான தூர அளவின் காரணத்தாலேயே மற்றைய கிரகங்களை விஞ்ஞானிகள் ஆராயச்சி செய்வது சுலபமாகவிருக்கின்றது.
எல்லையற்ற பரந்த பிரபஞ்சத்தில் எண்ணிறந்த கோள்கள் ஆங்காங்கே உயிரினங்கள் வாழக்கூடிய ஆற்றலைக் கொடுக்கக்கூடிய பெரும் சக்தி கொண்ட சூரியனைப் போன்ற கிரகங்களின் துணையுடன் வேற்றக் கிரகங்கள் இருக்க வாய்ப்புண்டு.
விஞ்ஞானிகளின் ஆய்வின்படி அந்த உயிரினம் ஏலியன்ஸ் என்ற நிலைப்பாட்டினை இன்றுவரை எடுத்து வருகிறார்கள்.
ஏலியன்ஸ்கள் மனிதர்களைவிட சக்தி வாய்ந்தவை என்று நம்பப்படுகின்றது.நூறாண்டுகளுக்கு மேலாக வேற்றுக்கிரக வாசிகளின் பறக்கும் தட்டுப் போன்ற விமானங்கள் பூமிக்கு வந்து நோட்டம் விடுகின்றன என்பதை புகைபபடஙகள்; மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
ஏலியன்ஸ்களின் இனப்பெருக்க முறையை விபரிக்கும் வேற்றுக்கிரக வாசிகளை முன்னிலைப்படுத்திய திரைப்படங்களில், ஏலியன்ஸ்களின் வயிறு பிரிந்து இன்னொரு ஏலியன்ஸ் பிறப்பது போல காட்டப்பட்டிருந்தது.
இந்த ஏலியன்ஸ் பூமியிலுள்ள மனித உயிரினம் தொட்டு மற்றைய உயிரினங்கள் போல ஆண் பெண் வேறுபாடுடையவையா என்பது கண்டறியப்படாத போதும்,ஏலியன்ஸ் ஆண்பெண் பாலின வேறுபாடற்ற ஒரு உயிரினம் என்பதற்கமைய ஆய்வுகள் மேற்கொள்னப்படுகின்றன.
இந்த ஆய்வின் அடிப்படையில் பூமியிலுள்ள ஆணும் பெண்ணும் சந்ததி விருத்திக்கு ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்காது அவரவரே பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்கமையவே மனித உடலின் கலங்களை பிரித்தெடுத்து அவற்றில் உள்ள ஆண் பெண் நுண்கலங்களைத் தோற்றுவிக்கலாம் என்ற ஆராய்ச்சியினை யப்பானிய விஞ்ஞானிகள் மேற் கொண்டு வருகின்றனர்.
வேற்றுக் கிரகங்களில் ஆண் பெண் வேற்றுமையற்ற நிலையில் அங்கு சந்ததி தோற்றம் ஓர்பாலினத்திலிருந்து தோன்ற வாய்ப்புண்டு.
மகாபாரதக் கதையில் வரும் துரியோதணனின் நூறு சகோதரர்களின் பிறப்பு உயிரியல் விஞ்ஞான ரீதியாக அவர்கள் பிறக்க வைக்கப்பட்டவர்கள் என்பதை, சில வேளை அது கற்பனை கலந்த கதை என்று ஆரம்ப காலங்களில் நம்பியிருந்த போதிலும்,ஆணின் விந்தணுவையும் பெண்ணின் கரு முட்டையையும் வெளியே எடுத்து ரெஸ்ற் ரியூப்பில் வளரச் செய்து பிறகு அதனை பெண்ணின் உடலில் செலுத்தி குழந்தையை பிறக்கச் செய்த அதிசயத்தை சமகாலம் கண்டிருக்கின்றது.
மகாபாரதக் கதையின்படி, துரியோதணனின் தாயார் காந்தாரிக்கு குறைமாதத்தில் சிதிலமாகி பிறந்த பிண்ட உயிர்களை நெய்க்குடத்திலிட்டு தரையின் கீழ் பாதுகாத்து
நூறு உயிர்களை பிறக்க வைத்தனர் என்பது மகாபாரதக் கதை.
ரெஸ்ற் ரியூப்பில் ஒரு குழந்தைக்கான ஆரம்ப கட்டத்தை உருவாக்கலாம் என்ற உண்மை நிரூபிக்கப்பட்ட நிலையில் அன்று அதுவும் சாத்தியமே.
இன்றுதான் அபரிதமாக விஞ்ஞானம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதாகக் கருத முடியாது.
உயிரியல் விஞ்ஞான வரலாற்றின் ஆரம்ப நூல்களின் வழியேதான் இன்று பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் நடைபெறுகின்றன என்பதை பரவலாக நம்புகின்றனர்,அது உண்மையும்கூட.

பூமியல் இயற்கை, ஆண் பெண் உறவு மூலமே இனவிருத்திக் கொள்கையை நிலைநாட்டி வருகின்றது.மனிதர்கள் மட்டுமல்ல விலங்கினங்கள் பறவையினங்கள் மற்றும் மரம் செடி வகைகள்கூட எதிர்பாலின சேர்க்கையினாலேயே இனவிருத்தியை மேற்கொள்கின்றன.
இயற்கை மனிதர்களுக்கு கொடுத்த வரமே ஆண் பெண் உடலுறவுச் சேர்க்கையும், அந்த உறவின் போது அவர்கள் துய்க்கும் இன்பமுமேயாகும்.
இங்கே இன்னொரு விடயத்தையும் இக்கட்டுரை கருதித்தர விரும்புகிறேன்.சிவ வழிபாட்டில் பெண்ணின் யோனியை பீடமாகவும் ஆணின் ஆணுறுப்பை லிங்கமாகவும் கொண்டு சிவனும் பார்வதியும் இணைந்த பேரின்ப நிலை என்று மனித சந்ததி விருத்திக்கு இத்தகவல் சமய நெறியூடாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாலியல் சார்ந்த நூல்களில் ஆணுறுப்பை லிங்கம் என்றும் குறிப்பிட்டுள்ளமை ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
இயற்கையின் விதியை விபரீதமான விஞ்ஞான நோக்கில் மறுதலிக்கின்ற போது, பூமியின் மையப் பகுதியில் இடைவிடாது கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்பின் மீது அணுவாயுத தாக்குதல் ஏற்படுத்தி பூமி;க்கு பிரளயத்தை ஏறபடுத்துவதற்கு ஒப்பான செயலாகும் இது.
ஆண் தனியாகவும் பெண் தனியாகவும் ஒரு பாலினம் இன்னொரு பாலினத்தின் உதவியில்லாமல் இனவிருத்தியைச் செய்யலாமெனில் தனித்தனி உயிரினமே இனித் தேவைப்படாது என்ற நிலை வருமானால் ஒரு உயிரினத் தோற்றமே தோன்றுவதற்கு தோற்றுவாயாகலாம்.
இயற்கையின் விதி பூமியில் இவ்வாறுதான் உயிர்கள் தோன்ற வேண்டும் என்பதற்கமையவே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.
மனிதர்கள் மீதான ஆராய்ச்சியின் காரணமாக,மனித உடற் பாகங்களின் தேவை எவ்வாறு ஒரு மனிதனின் செயல்பாடுகளுக்கும் அவன் வாழ்க்கையை இரசித்து உள்வாங்கி இன்பமயமான வாழ்க்கைக்கு உதவுகின்றது என்பதை உன்னிப்பாக
கவனித்தோமானால் வியப்புக்கு மேல் வியப்பு ஏற்படும்.
மனித உடல் என்பது இயற்கையளித்த மிகப்பெரிய தொழிற்றசாலை.இந்த தொழிற்சாலை ஒரு மனிதன் இறக்கும் வரை இயங்கிக் கொண்டிருப்பதனால்தான் அவன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறானா என்பது கேள்விக்குறியே.
தன் உடல் மீதான பார்வையை ஊன்றி ஒருவன் கவனிப்பேனானால் இயற்கை அளித்த உடல் எனும் பொக்கிசத்தை இடையறாது பாதுகாப்பான்.
உடல் எதனால் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றது என்பதும் ஒவ்வொரு உடல் உறுப்புக்களின் தேவையும், அந்த உடல் உறுப்புக்களை இயக்குகின்ற நுண்ணிய சமிக்ஞைகளும் மாபெரும் வலையமைப்பாகும்.
எழும்புகள்,தசைகள், தசைநார்கள்இருதயம்,சுவாசப் பைகள்,கல்லீரல், சிறுநீரகங்கள், இரத்த நாளங்கள், சமிக்ஞைகளை அனுப்புகின்ற தலைமையகமான மூளையும் அதனோடு தொடர்புடைய நரம்பு மண்டலங்கள் என்பவை இடையறாது இயங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த இயக்கத்தினால் ஐம்புலன்கள் வழியாக மனிதன் தன் வாழ்க்கையை இரசித்தும் ருசித்தும் வாழ்வதனாலேயே வாழ்க்கை மீது அவனுக்கு பிடிப்பு ஏற்படுகின்றது.
உணவு உண்ணும் போது அறுசுவையை உணரும் திறன், ஒளிவழி உலகைப் பார்க்க கண்கள்; கொண்டிருக்கும் திறன், சுவாசிக்கவும் நறுமண வாசனைiயும், நாற்ற வாசனையை உணர மூக்கினையும்,ஒலி வடிவங்களை கேட்டுணர காதுகளையும,; உண்ட உணவும் குடித்த நீரும் உடலின் தேவைக்கு போக மலமாகவும் சிறுநீராக வெளியேறவும், உடலின்பத்தைக் கொடுத்து அதே வேளை சந்ததி விருத்திக்காக ஆண் பெண் உறுப்புக்களையும்,குளிரையும் வெப்பத்தையும்,தென்றலின் சுவையையும் இன்னுமின்னுமாய் வெளிப்புற பவன மண்டலத்தின் வேறுபாடினை உணர உடலைப் போர்த்திய தோலையும்,மனிதனை உயிரோடு இருக்க வைக்க இரத்தம் எனும் ஜீவ நதியையும்,காற்றில் கலந்திருக்கும் பிராணவாயுவை பிரித்தெடுத்து தனது உணவாகக் கொள்ளும் சுவாசப் பைகள்,உள்ளியக்கத்தை ஒழுங்குபடுத்திக் கெடுக்கும் கல்லீரல்,குடிக்கும் தண்ணீரையும், இரத்தத்தினையும் சுத்தமாக்கி கொடுக்கும் சிறுநீரகங்கள் இவை யாவும் மனிதன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவு அற்புதங்களையும், மனித வாழ்வின் தேவை கருதி இயற்கையின் விதிக்கமைய அமைக்கப்பட்டிருக்கின்றன.வேற்றுக் கிரகங்களில் வாழும் உயிரினங்களின் உடல் தோற்றம் ஏலியன்ஸ் தோற்றத்திற்கு அப்பாற்பட்டு வேறாகவும் இருக்க வாய்ப்புண்டு.
சில வேற்றுக்கிரகங்களில் இனவிருத்தியே நடைபெறுவதில்லை.பலகோடி உயிர்கள் பலவாயிரம் கோடி ஆண்டுகளாக இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.அது
அந்தந்த கிரகங்களின் இயற்கை விதி.இயற்கை விதியே உலகை இயக்குகின்றது.இயற்கை விதியின் மூலக் கூறுகளாக இருப்பவை இயற்பியல் வேதியல் கலப்பேயாகும்.இந்தக் கலப்புத் தன்மையே பூமியில் மனித உயிரினங்கள் தொட்டு அனைத்து உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமானவையாகும்.ஒரு உதாரணமாக மனித இரத்தம் பூமியில் சிவப்பாக இருப்பது போல,வேற்றுக்கிரக வாசிகளின் இரத்தம் என்ற ஒரு திரவகம் இருக்குமானால் அவை வேறு நிறத்தில்கூட இருக்கலாம்.
பூமியில் தோன்றிய ஆண் பெண் வேறுபாட்டு உயிரினத் தோற்றமே வாழ்க்கையில் பிடிப்பையும்,வாழ்க்கையில் அழகியல் இரசனையையும் ஏற்படுத்துகின்றது.உயிருடன் வாழ்வது மட்டுந்தான் வாழ்க்கையல்ல.உடலின் பாகங்கள் சுவை உணர்ந்து சுவைத்து வாழ்வதே வாழ்க்கை.
யப்பானிய விஞ்ஞானிகள் மேற்கொண்டிருக்கும், பெண்ணின் துணை இல்லாமல் ஆண் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதும்,ஆணின் துணை இல்லாமல்n பெண் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆராய்ச்சி ஆகா என்று வியப்பைத் தருவதல்ல, இயற்கை விதியினை மீறும் விபரீத ஆராய்ச்சி.
![]()