நிகழ்வுகள்

களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு!

இன்று(18) மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாகவும் இரத்ததான நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்றது.

உங்கள் உதிரத்தால் உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப்பிரிவின் டாக்டர் ஜி.மனோ துசாந்தன் தலைமையிலான தாதி உத்தியோகத்தர்கள், இரத்த பரிசோதகர்கள், வைத்தியசாலை சிற்றுழியர்கள் கலந்து கொண்டு வைத்தியபரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.


களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால்  வருடந்தோறும் இவ் இரத்ததான முகாம் நடைபெற்றுவருவதாகவும் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மத்தியில் இரத்ததானம்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கொரோனாவிற்கு பின்னர் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இரத்தப்பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலும் இவ்வாறான இரத்ததான நிகழ்வினை ஏற்பாடுசெய்து நடத்திவருவதாக பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *