கட்டுரைகள்

சந்தேகப்பட்டதை சந்தேகப்படும் சூழ்நிலை இல்லை!… ஏலையா க.முருகதாசன்

கொரொனோ நுண்கிருமிப் பரவலின் மூலமாக இருப்பதன் மையப்புள்ளி சீனாதான். இந்த நுண்கிருமி எவ்வாறு ஆரம்பித்தது என்பதற்கான உறுதியான உண்மையை அடித்துக் கூறக்கூடிய மூல காரணியை சீனா இதுவரை கூறவில்லை.

போன போக்கில் வெளவால், பாம்பு ஆகிய இரண்டையும் பொதுவாகக் குற்றஞ்சாட்டியதன் பின் அது தொடர்பான உறுதியான நிரூபண முடிவுகளை உலகம் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் இதுவரை சொல்லப்படவில்லை.

பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்கள் சீனா உற்பத்தி செய்த நுண்கிருமிதான் கோவிட் 19 என்பதை மறுக்கின்ற திடமான பதிலும் சீனாவிடமிருந்து வெளிப்படவில்லை.

சீனாவில் வுகான் மாகாணத்தில் நுண்கிருமிகள் தொடர்பான ஆய்வுகூடமிருப்பதை சீனா மறுக்கவில்லை.மருத்துவ ஆய்வியல் அறிஞர்கள், அவாதனிகள் தொடக்கம் சாதாரண மனிதர்கள் வரை சீனாவின் மீது சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார்கள்.

அதே வேளை ஒவ்வொரு நாடு கொரொனோ பரவல் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதால் சீனா மீது அவதானம் கொள்ளவில்லையென்று சொல்லிவிட முடியாது.

ஒருபுறம் கொரொனோ தொற்றிலிருந்து தமது மக்களைக் காப்பாற்றவதற்காக போராடி வரும் பல நாடுகளில் நுண்கிருமி தொடர்பான ஆய்வுகளைச் செய்து வரும் நாடுகளிலுள்ள அவை சார்ந்த அமைப்புகள் இந்நுண்கிருமி உருவாக்கப்பட்டதா என்பதை மிகவும் அமைதியாக பல கோணங்களில ஆய்வு செய்து செய்து கொண்டுதானிருக்கின்றன.

ஆய்வு கூடங்களின் பணியாக இருப்பவை, மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான பக்ரீயாக்களினதோ அல்லது நுண்கிருமிகளினதோ உயிரியில் திறன் எத்தகையது அவற்றினால் மனிதர்களுக்கு என்னென்ன பாhதிப்பு ஏற்படும் என்பதுடன் மனித உடல்களில் அவை எந்தெந்த உறுப்புக்களை பாதிக்கும் என்பதைக் கண்டறிவதேயாகும்.

இந்த நுண்கிருமிகளை முதலில் எலி, குரங்கு, முயல் போன்ற மிருகங்களுக்கு செலுத்தி, இந்நுண்கிருமியினால் மிருகங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்த பின்னரே மனதர்களுக்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதுடன் மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

மனிதர்களைப் பாதிக்கும் பக்ரீயாக்களோ நுண்கிருமிகளோ எங்கிருந்து பரவுகின்றன என்பதை இதுவரை அறியப்பட்ட போது அவை பெரும்பாலும் மிருகங்களிலிருந்தும் பறவைகளலிருந்துமே பரவுகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கின்றன.

அதே வேளை மிருகங்கள் பறவைகளிடம் காணப்படும் நுண்கிருமிகளை அணுவணுவாக ஆராய்ந்தறிந்து அவற்றை மிக ஆபத்தான நுண்கிருமியாக, அதற்கிருக்கும் இயல்பான மனிதருக்கு பாதிப்பைக் கொடுக்கும் வல்லமைக்கப்பாலும் உருவாக்குவதிலும் உயிரியல் ஆய்வு நிலையங்களை வைத்திருக்கும் நாடுகள் ஈடுபடுவதற்கு சாத்தியங்கள் உண்டு.

உலகளாவிய ரீதியில் ஒரு பார்வையைச் செலுத்தும் போது,இன்று உலகம் வணிகமயப்படுத்தப்பட்ட பொருளாதார கட்மைப்பினையே அடித்தளமாக கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.

தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் பாவனையாளர்களைச் சென்றடைந்து பெறும் ஒரு பகுதியான வருமானத்திலும் பல உலக நாடுகள் இயங்குகின்றன.

ஒரு நாட்டினுடைய சனத்தொகைக்கு ஏற்ப, உற்பத்தி போதுமானதாக இருப்பது மட்டுமே பொருளாதார வளர்ச்சியல்ல.ஒவ்வொரு நாட்டினுடைய பணப் பெறுமதி சர்வதேச நாணயப் பெறுமதி சமனற்றவையாகவே இருக்கின்றன.அதனால் அந்நியச் செலவாணியைப் பெற்றுக் கொள்வதற்காக பெறுமதிமிக்க பணத்தைக்

கொணட நாடுகளுக்கு தமது பொருட்களை ஏற்றுமதி செய்கின்றன.

அதனால் பொருட்களை பணப்பெறுமதி கூடிய நாடுகளுக்கு விற்றுவிடுவதில் பணபபெறுமதியறஇற நாடுகள் கவனம் செலுத்துகின்றன.

இன்று உலகச் சந்தையை ஆக்கிரமித்து வைத்துள்ள நாடு சீனாதான் என்பது எல்லோராலும் அறியப்பட்டதே.

சீனாவின் வணிக ஆக்கிரமமிப்பும், ஓடிச் சென்று உதவி செய்தல், அபிவிருத்திகளுக்கு பணம் கொடுத்து உதவி செய்தல் என பலமுனை ஆக்கிரமிப்பு இன்று உலகெங்கும் பரந்துவிரிந்து நிற்கின்றது.

மற்றைய நாடுகளின் உற்பத்திகள் பாதிக்கப்படும் நிலை தோன்றும் போதுதான் தனது உற்பத்திகளை அங்கு செலுத்தி விற்கலாம் என்று சீனா தி;ட்டமிட்டிருக்காது என்று சொல்வதிற்கில்லை.

மற்றைய நாடுகள் சீனாவுடன் வர்த்தகப் போரை நேரிடையாக நடத்தவில்லையாயினும், முள்ளில்பட்ட துணியை அவதானமாக எடுப்பது போல சீனாவை மிக அவதானமாக கையாளுகின்றன.

ஆனால் அமெரிக்காவும் சீனாவும் தினமொரு வர்த்தகப் போரை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில்தான் கோவிட் 19 என்ற பெயரிட்ட கொரொனோ நுண்கிருமி சீனாவிலிருந்து பரவத் தொடங்கி இன்று இலட்சக்கணக்கான மனிதர்களுக்கு தொற்றியதுடன், பலவாயிரம் மனிதர்களை இறக்கச் செய்திருக்கின்றது.

இந்நுண்கிருமி இன்னொரு நுண்கிருமியிலிருந்து வினைத்திறன் கொண்ட கிருமியாக மாற்றமடைய வைத்து உற்பத்தியாக்கப்பட்டதா என்று எண்ண வேண்டிய நிலைக்கு இன்றுவரை இக்கிருமிக்கான திட்டவட்டமான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்காத நிலையை உற்று நோக்க வேண்டியுள்ளது.

சீனாவில் இந்நுண்கிருமி பரவாமல் விடுத்து,மற்றைய நாடுகளில் இந்நுண்கிருமி பரவியிருந்தால் சீனாதான் இந்நுண்கிருமியை உற்பத்தி செய்தது என எண்ண இடமுண்டு,ஆனால் சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றதே என்ற இன்னொரு கேள்வி எழும் போது, சீனா மற்றைய நாடுகள் சந்தேகப்படாமலிருப்பதற்காக, தனது நாட்டிலும் ஒரு கணிசமான தொகையினருக்கு இத்தொற்றினை ஏற்படுத்தியும், இறப்புக்களை ஏற்படுத்தியும் இருக்கலாம் என்றும் கொள்ளலாம்.

இது ஏன் உற்பத்தியாக்கப்பட்ட கிருமி என்பதற்கான சான்றுகளாக,(1) இக்கிருமி மக்களிடமிருந்து மக்களுக்குத் தொற்றிக் கொண்டிருப்பது,(2) இக்கிருமியின் தொற்றுக்குட்பட்டவர் இருமினாலோ தும்மினாலோ அதிலிருந்து தெறிக்கும் நீர்த்துளிகள் எங்கெங்கு படிகிறதோ அங்கெல்லாம் மணித்தியாலக் கணக்கில் நீர்துளிகளோடு கலந்துள்ள இந்நுண்கிரமிகள் உயிருடனிருக்கின்றன(3) இத்தொற்றுக்குட்பட்டவர் வெளிப்பார்வையில், அவரின் உடம்பில் எவ்வித மாற்றத்தையும் காண முடியாதது,(4) இத்தொற்றுக்குட்பட்டவர் நோய் தீவிரமடைந்ததன் பின்னரே இவருக்கு கொரொனோ தொற்றியிருக்கிறது என்பதை கண்டறியும் வெளிப்பாடு,(5) இத்தொற்று ஏற்பட்டவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்து,பாதிக்கப்படாதவரிடமிருந்து அதாவது சுகதேகியாக உள்ளவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புண்டு என்ற நிலை,(6)ஒரு உதாரணமாக கூட்டமாக நிற்பவர்களில் எவருக்கு கொரொனோ தொற்று இருக்கின்றது என்பதைக் கண்டறிய முடியாத நிலை,(7)இத்தொற்று உள்ளவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றரை மீற்றர் இடைவெளியைப் பேணாத நிலையில் அவரருகில் நிற்பவருக்கு பரவும் நிலை(8) முன்னால் போகும் ஒருவர் தும்மியதன் பின்போ இருமியதன் பின்போ சென்று கொண்டிருக்கும் போது,அவர் பல மீற்றர்கள் சென்றதன் பின்பும் காற்றில் இக்கிருமி பரவி நிற்றலும் பின்னால் வருபவருக்கு அக்கிருமியினால் தொற்றுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

பல அவதானிப்புகளினால் சீனாவில் இக்கிருமி தோற்றுவிக்கப்பட்டு மனிதர்கள் காவிகளாகப் பயன்படுத்தப்பட்டனர் என்பதை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியவில்லை.

காவிகளாக பயன்படுத்தப்பட்டவர்கள் சீன விமான நிலையங்களில் சென்று அங்கு வௌ;வேறு நாடுகளுக்குச் செல்லவிருக்கும் பயணிகளுக்கு மத்தியில் இயல்பாக இருமுவது போலவும், தும்முவவது போலவும் செய்தாலே அங்கு நிற்கும் பலருக்கு இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

அதே போன்று கழிவறைகளுக்குள் சென்று கைகழுவும் தொட்டிகளில் இருமுதல், தும்முதல், சளியைச் சீறுதல் போன்றவற்றின் மூலமும் இப்பரவலைச் செய்யலாம்.

தொற்றுக் காவிகள் விமானங்கள் மூலமாகவும் கப்பல்கள் மூலமாகவும் பிரயாணம் செய்தும் இப்பரவலைச் செய்திருக்கலாம்.அத்தகையவர்கள் உலக நாடுகளிலுள்ள கடைகளுக்குச் சென்று அங்குள்ள பொருட்களடியில் தும்மியோ இருமியோ அப்பொருட்கள் மீது இககிருமியை படச் செய்தலும்,பொருள் வாங்குவோர் மூலம் அது தொடர் தொடராக பரவுவதற்கான சூழ்நிலையைத் தோற்றுவிக்கலாம்.

இந்நிலையில் வெளவாலிடமிருந்து இக்கிருமியை பிரித்தெடுத்து மனிதர்களுக்க செலுத்தியிருக்கலாம் என்ற செய்தியும். அப்படியெனில் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றிலிருக்கும் நுண்கிருமிகளைக் கண்டறிந்து அவற்றை தமது தேவைக்காக, மனிதகுலத்திற்கு எதிரான அழிவு ஆயுதமாக பயன்படுத்தும் நிலை உருவாகி வருகின்றதா எனக் கேள்வி எழுகின்றது.

இக்கிருமித் தொற்று மனித காவிகள்,நோயைப் பரப்புவதை ஒரு தேசிய கடமையாகச் செய்தார்களா அல்லது அவர்களையறியாமலே அவர்கள் பயன்படுத்தப்படார்களா என்பது கண்டறிவது மிகச் சிரமமானதே.

பலகோணங்களிலிருந்து பார்க்கையில், சீனா மீது சந்தேகப்படுவதைச் சந்தேகிக்கும் சூழ்நிலை இல்லை என்பதை மறுக்கமுடியவில்லை.ஏனென்றால் உலகை ஆளும் எண்ணம் சீனாவுக்கு வணிக வெறியாகவே மாறிவருகிறது.

இந்தச் சந்தடியில் யூதர்களிடம் ஒரு கவனம் செல்லுகின்றது.எதிர்காலத்தில் சீனாதான் குற்றவாளி என்பதை உலகம் அறிந்து கொண்டிருந்தாலும் கண்டும் காணாமல் விட்டுவிடவும் கூடும்.

இத்தொற்றினால் வயதானவர்களும், கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுமே உலகெங்கும் இறக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்க்கும் போது உலகச் சனத் தொகையைக் குறைக்கும் மனித அறுவடை அல்லது மரணங்களை ஏற்படுத்தும் சதிக் கோட்பாடா எனவும் தோன்றுகின்றது.

அரிதட்டில் அரிக்கும் போது,அரிதட்டில் மிஞ்சியிருக்கும் தேவையற்ற பொருட்களை எறிந்து விடுவது போல மரணக் கோட்பாட்டிற்கான அரிதட்டு அணுகுமுறையில் அரித்தரித்து கொரனோ ஊடாக மனிதர்கள் அரித்தரித்து இறப்புக்கூடாக எடுக்கப்படுகின்றனரா என்ற சிந்தனை தோன்றுகின்றது.

இதற்கு கொரொனலிசம் என்ற பெயர் பொருந்துகிறதே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button