Featureநிகழ்வுகள்

தென்னிந்திய கவிஞர் வித்யாசாகர் கலந்துகொண்ட சர்வதேச தாய்மொழி தினம்.

சம்மாந்துறை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் ஏற்பாட்டில் சர்வதேச தாய்மொழி தினம் பாடசாலை முன்றலில் இன்று(24) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.சீ.ஏ.மொஹமட் இஸ்மாயில் தலைமையிலான இந்நிகழ்வில் தென்னிந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான வித்யாசாகர் பிரதம அதிதியாகவும் தென்னிந்திய பதிப்பாசிரியர் இளம்பரிதி கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தார்.

தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பாடசாலையினால் வெளியீடப்பட்ட றெக்கை சஞ்சிகையின் பிரதியினை
பாடசாலை அதிபரிடமிருந்து தென்னிந்தியக் கவிஞரும் எழுத்தாளருமான வித்யாசாகர் இதன்போது பெற்றுக்கொண்டதுடன், பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.

மேலும், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த மூன்று வருடங்களாக அயராது உழைத்த பாடசாலை அதிபர் ஏ.சி.ஏ.முஹம்மது இஸ்மாயில் “கல்வி நெறி அறிஞர்” எனும் உயர்பட்டம் வழங்கி வித்யாசாகரால் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *