கவிதைகள்

செல்லாது புன்சிரிப்பு எம்மை விட்டு!… சங்கர சுப்பிரமணியன்.

சுற்றும் விழியொளியோ கண்கள்
பற்றியிழக்கும் கண்பாவை அழகு
முழுதாய் கவலை பறக்கக் கண்டோம்
உன் கண்களைப் பார்க்கையிலே

தாவிப் பிடித்துதூக்கி கொஞ்சி
கூவி அழைக்க நான் இருந்தேன்
மாவிலை தோரணமாயுன் அழகு
நாவினை கட்டிப் போட்டதம்மா

புன்சிரிப்பை கண்ணில் காட்டி
உன் சிரிப்புக்கு பயிற்சி காட்டும்
அன்பாலே ஆனந்தமாய் நீயும்
தன்பால் பார்ப்பவரை கவiர்ந்தாய்

எங்கோ பார்த்து ஏகாந்தமானாய்
இங்கே நீ பாராயோ ஒரு நொடி
தங்கமே உன் பார்வை பட்டாலே
எங்கள் துன்பம் பறந்தோடிடுமே

பல் உனக்கு முளைக்கலையோ
சொல்லு நீ வாய் திறந்து சிரிக்க
இல்லாது போனாலும் இன்பமும்
செல்லாதுன் புன்சிரிப்பை விட்டு!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *