முச்சந்தி

செம்மணி விசாரணைக்கு சி.ஐ.டி.யினர் நிபந்தனை; புதைகுழிக் காலத்தை அறிந்தால் மட்டுமே தொடர முடியும் என்று நீதிமன்றத்திடம் தெரிவிப்பு

செம்மணிப் புதைகுழி எந்தக் காலத்துக்குரியது என்பது தொடர்பான கால எல்லையை அறிந்தால் மட்டுமே விசாரணைகளைத் தொடர முடியும் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

செம்மணி மனித புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது இதனை வலியுறுத்தினர்.

புதைகுழியின் கால எல்லையை அறிவதற்கு ஏதுவாக கார்பன் பரிசோதனைக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் கார்பன் பரிசோதனையை நடத்தி விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திட்டமிடுகின்றது என்பது சட்டத்தரணிகள் பலரின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ள நிலையிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *