இலங்கை

சோமதேவாவின் அறிக்கையின்படி செம்மணி அகழ்வில் அரச பணம் வீண் விரயமாக்கப்பட்டதா?;  கேள்வி எழுகின்றது என யாழ்.நீதிவான் தெரிவிப்பு

பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையின்படி செம்மணி மனித புதைகுழி அகழ்வில் அரச பணம் வீண் விரயமாக்கப்பட்டதா என்று கேள்வி எழுகின்றது என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் செ.லெனின்குமார் தெரிவித்தார்.

செம்மணி விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது சட்டத்தரணிகள் மத்தியிலான கலந்துரையாடலில் நீதிவான் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா முதல் வழங்கிய அறிக்கைக்கும் இறுதியாக வழங்கிய அறிக்கைக்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உள்ளது. இறுதியாக வழங்கிய அறிக்கையில் இயற்கையான அனர்த்தம் மற்றும் தொற்றுக்கள் காரணமாக இந்த இறப்புகள் இடம்பெற்று இருக்கலாம் என்று தெரிவித்த நிலையில் அவ்வாறான ஒரு காரணமாக இருந்திருந்தால் மூன்று கட்டங்களாக இந்த அகழ்வை நடத்தி இருக்க தேவையில்லை. அகழ்வை ஆரம்பத்திலேயே நிறுத்தி இருக்கலாம்.

என்பு கூட்டு தொகுதிகளில் வெளிப்படையாக அடையாளப்படுத்தக்கூடிய அடையாளங்களை முழுமையாக நாங்கள் காண முடியவில்லை. குறித்த பகுதியில் சில சட்டவிரோதமான செயல்கள் நடந்தது.

சாதாரண வழமையை தாண்டி அங்கு புதைப்புகள் இடம்பெற்றுள்ளது. மாட்டு எலும்புகளும் அதிக அளவில் மீட்கப்பட்டுள்ளது. நிறுவன மேற்பார்வையில் அந்த புதைப்புகள் நடந்திருந்தால் அது ஒழுங்காக புதைக்கப்பட்டிருக்கும். அங்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுகின்றது. எதிர்பாராத நிலைமையை இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கை எந்த ஒரு காலத்தையும் சொல்லவில்லை. காலச்சான்று இருந்தும் காலம் சொல்லப்படவில்லை. வெளியில் ஆயிரம் குரல்கள் காணப்படுகின்றது. எலும்பு எடுப்பது மட்டும் நீதிமன்ற கடமை அல்ல. அதிகாரத்தை மீறி நீதிமன்றம் செல்ல முடியாது.

வெட்டு காயங்களோ, சூட்டு காயங்களோ வெற்றுக் கண்களுக்கு தெரியவில்லை. ஆய்வு கூடங்களில் இது தெரியவரலாம்.

மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் மன்றுக்கு மாற்று கருத்து இல்லை. கார்பன் பரிசோதனை செய்து அது 30 வருடத்துக்குட்பட்டது என்றால் கட்டாயம் மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் – என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *