புதை குழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது; சோமரத்ன ராஜபக்ச கூறியதாக நீதிமன்றத்தில் சி.ஐ.டி.யினர் தெரிவிப்பு

செம்மணியில் விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது என சோமரத்ன ராஜபக்ச, தமக்கு வாக்குமூலம் தந்ததாக நீதிமன்றத்தில்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் கிருசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோது இவ்விடயம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கூறப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் தான் இராணுவச் சிப்பாயாக வேலை செய்யும்போது விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட பிரதேசத்தில் புதைத்ததாகவும் எனினும் தற்போது தன்னால் அதனை அடையாளம் காட்ட முடியாது எனவும் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
மேலும் சித்துப்பாத்தி என்ற பெயரே தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்தார் என்றும் அவர்கள் கூறினர்.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் கருத்தை ஆட்சேபித்த சட்டத்தரணிகள், சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டினர்.
![]()