மரபணு மாதிரிகளை வழங்க மூவர் தயார்; நீதிமன்றத்தில் சுமந்திரன் சத்தியக்கடதாசி

செம்மணி படுகொலை மற்றும் மனித புதைகுழி சம்பவம் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் கால கட்டத்தில் அப்பகுதியை அண்டி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மூவர் தங்கள் மரபணு மாதிரிகளை மன்றுக்கு வழங்க தயார் என்ற சத்தியக்கடதாசி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் நடைபெற்ற போது சுமந்திரனால் இந்த சத்தியக்கடதாசி சமர்ப்பிக்கப்பட்டது.
மேலும் அந்த சத்தியக்கடதாசியை மன்றிலே வைத்திருக்குமாறும் ஆய்வு தொடர்பாக முடிவெடுக்கும் வரை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ஒன்றாவது இந்த பெற்றோருடைய மாதிரியோடு ஒத்துவருமாக இருந்தால் இது எப்போது நடைபெற்றது என்பது ஊர்ஜிதமாகும். காபன் பரிசோதனையின் நம்பகத்தன்மை தொடர்பாக சர்வதேச ரீதியில் பல கேள்விகள் உள்ளது.
ஆகையால் மரபணு பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றார்.
![]()