பலதும் பத்தும்

முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தலைக்குத் தீர்வாக விசித்திர சீப்பு!

சீனாவின் பெய்காங் பல்கலைக்கழக (Beihang University) ஆய்வாளர்கள் குழுவொன்று, முடி உதிர்வு மற்றும் வழுக்கைத் தலை (Androgenetic Alopecia) பிரச்சினைக்குத் தீர்வாக “டீடாங்கிள்” (Detangle) என்ற பெயரில் புதிய பரிசோதனை ரீதியான இலத்திரனியல் சீப்பொன்றை உருவாக்கியுள்ளது.

இந்தச் சீப்பின் பற்களுக்கு இடையே உருவாகும் துடிப்பு மின்புலங்கள் (pulsed electric fields) ஊடாக, சருமத்திற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் மருந்து மூலக்கூறுகளை ஆழமாக முடியின் வேர்க்கால்களுக்குள் செலுத்தும் செயற்பாடு இதன் மூலம் முன்னெடுக்கப்படுகின்றது.

இரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தூண்டும் மூலக்கூறு ஒன்றும் (VEGF-A), முடி உதிர்வுக்குத் தாக்கம் செலுத்தும் DHT ஹோர்மோனைக் கட்டுப்படுத்தும் மூலக்கூறு ஒன்றும் (SRD5A2 siRNA) இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எலிகளைப் பயன்படுத்தி 28 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்டப் பரிசோதனைகளில், சிகிச்சை அளிக்கப்பட்ட பகுதிகளில் 98% முதல் 100% வரையான முடி வளர்ச்சி பதிவாகியுள்ளதுடன், இது சாதாரண சிகிச்சையான மினொக்சிடில் (minoxidil) மருந்தை விடவும் அதிகளவான பெறுபேற்றைக் காண்பித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்பம் இதுவரை விலங்குகளைப் பயன்படுத்தி மாத்திரமே பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதனை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வதற்கு முன்னர், இதன் பாதுகாப்பு, நீண்டகால வெற்றி மற்றும் நடைமுறைச் சாத்தியத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மனிதர்களைப் பயன்படுத்தி வைத்தியப் பரிசோதனைகளை (clinical trials) முன்னெடுப்பது அவசியம் என வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *