இலங்கை
எலும்புக் கூடுகளை ஆய்வு செய்ய உள்ளூர் நிபுணர்கள்; நீதிமன்றில் அறிக்கை சமர்பிப்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட என்பு கூடுகளை ஆய்வு செய்வதற்கான உள்ளூர் நிபுணர்கள் அடங்கிய குழுவின் பெயர் விபரங்கள் நேற்று சட்ட வைத்திய அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி வழக்கு பற்றிய கலந்துரையாடல் நடைபெற்ற போதே சட்ட வைத்திய அதிகாரியினால் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
எலும்புகளின் பரிசோதனை மூலம் வயது, பால் , இறப்புக்கான காரணம் போன்ற விடயங்களை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
![]()