கவிதைகள்

“தீதும் நன்றும் பிறர்தர வாரா” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்   ….. அவுஸ்திரேலியா
ஓலைக் குடிசை இருப்பாரும் உறங்குகிறார்
ஓட்டு வீட்டில் இருப்பாரும் உறங்குகிறார்
காலை எழும்புவோம் எனும் நம்பிக்கையால்
ஞாலம் இருப்போர் உறங்கிடச்  செல்லுகின்றார்
 
ஆசையும் காதலும் அனைவர்க்கும் உண்டு
காதலும் மோதலும் நோதலும் உண்டு
சாதல் என்பது அனைவர்க்கும் சமமே 
வாதமும் வழக்கும் வேண்டாமே நமக்கு
 
கஷ்டங்கள் என்பது யாவர்க்கும் உண்டு
கஷ்டத்தைக் கவலையாய் மாற்றிட  வேண்டாம்
கஷ்டத்தை நினைத்தால் தவிர்த்தே விடலாம்
கருத்தினில் எடுத்தால் கலக்கம் அகலும்
 
பசியும் தாகமும் யாவர்க்கும் உண்டு
பந்தமும் பாசமும் யாவர்க்கும் உண்டு
பிறந்தார் அனைவரும் மறைவது பொதுவே 
இருப்பதைக் கொண்டு இன்பமாய் வாழுவோம்
 
ஏழையும் அழுகிறான் இருப்பானும் அழுகிறான்
இருவரின் அழுகையும் விதம் விதமாகும்
பிறந்தோம் என்பதை பெருமையாய் எண்ணுவோம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *