இலங்கை
செம்மணி அணையா விளக்குத் தூபியில் திருமாவளவன் அஞ்சலி

யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் செம்மணிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள செம்மணி அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் வ.சிறிபிரகாஸ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைக்கு வருகை தந்த திருமாவளவன் பின்னர் செம்மணி அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
![]()