இலங்கை

மன்னிப்புக் கேட்ட கஸ்ஸப்ப தேரர்; பிணை வழங்கிய நீதிமன்றம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட கஸ்ஸப்ப தேரருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இறுக்கமான நிபந்தனைகளுடன் நேற்று (17) பிணை வழங்கியது.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை (17) முன்னிலையாகி தனது தவறுகளை ஏற்றுக் கொண்டு மன் னிப்பு கோரிய நிலையில் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், ஒரு ஆள் பிணையி லும் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கி யது. இருப்பினும் அனுராதபுரத்தில் உள்ள வழக்கு தொடர்பில் அனுராதபுரம் சிறையில் இருப்பதால் சிறைச்சாலை அதிகாரிகளால் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத் துச் செல்லப்பட்டார்.

நேற்று (17) முன்னிலையாகியிருந்த கஸ் ஸப்ப தேரர் தனக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தான் மீறியுள்ளதாகவும், அனுராதபுரத்தில் வைத்து திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தையும், அதன் நீதிய தியையும் அவமதிக்கும் வகையில் கருத்துக் களை கூறியுள்ளதையும் ஏற்றுக் கொள்வதா கவும் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தனது சட்டத்தரணியின் ஊடாக நீதிமன்றில் மன்னிப்பு கோரியிருந்தார்.

இனிமேல் இந்த வழக்கு தொடர்பாகவோ நீதிபதி தொடர்பிலோ ஏனைய நீதிபதிகள் தொடர்பிலோ எவ்வித அவமரியாதையான கருத்துக்களையும் ஊடகங்களுக்கோ, பகிங் கரமாகவோ தெரிவிக்கக்கூடாது எனவும், பொது அமைதிக்கும் சமய சகவாழ்விற்கும் இழுக்கும். பாதிப்பும் ஏற்படுத்தும் வகை யில் எந்த கருத்துக்களையும் வெளியிடக் கூடாது எனவும், இந்த வழக்கின் சகல தவ ணைகளுக்கும் தவறாது தொடர்ந்து சமூகம ளிக்க வேண்டும் எனவும், நிபந்தணைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். அவ் வாறு இல்லாமல் நிபந்தனைகளை மீறினால் பிணை விடுப்பு இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு செல்ல நேரிடும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு பிணை யில் செல்ல உத்தரவிட்டார்.

திருகோணமலை நீதிவான் நீதிமன்றி னால் கடந்த புதன்கிழமை (II) அழைக்கப் பட்ட வழக்கிற்கு முன்னிலையாகாத கஸ் ஸப்ப தேரருக்கு எதிராக அன்றைய தினம் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டி ருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (16) நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த கஸ்ஸப்ப தேரரை பிணையில் செல்ல அனு மதிக்கக்கூடாது என திருகோணமலை துறை முக பொலிஸாரும், நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் அவமதித்து கருத்து வெளியிட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட வேண்டும் என எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் கோரியிருந்த நிலையில் கால அவகாசம் கோரி குறித்த வழக்கை நேற்று விசாரணைக்காக எடுத் துக் கொள்வதாக நேற்று முன் தினம் (16) நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *