இலங்கை

மாகாண சபைத் தேர்தல்; தடைப்படத் தமிழ்க் கட்சிகளே காரணம்

மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்படாமல் பின்தள்ளப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளே காரணமாகும். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீண்டும் முதலமைச்சராகிவிடக் கூடாது என்பதற்காக சுத்துமாத்துக்களுடன் சேர்ந்து தேர்தலை நடத்த முடியாதவாறு அதனை சட்டச் சிக்கல்களுக்குள் அவர்கள் கொண்டு சென்றுள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே. இளங்குமரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இளங்குமரன் எம்.பி இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைக்கு நிதி ஒதுக்கவில்லை என்று இனவாத ரீதியில் தோல்வி கண்ட அரசியவ்வாதிகளே கூறுகின்றனர். ஆனால் நாங்கள் மாகாண சபைகள் தேர்தலுக்காகவும் இந்த வரவு செலவுமத் திட்டத்தில் 8 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளோம். மாகாண சபைகள் தேர்தல்கள் பின்னோக்கி போவதற்கு காரணம் 2016ஆம் ஆண்டில் இதே தமிழ்த் தேசியக் கட்சிகளின் குடும்பிச் சண்டையினாலும் தேர்தலை வைக்கக்கூடாது என்ற சுத்துமாத்துக்களாலுமே தேர்தல் பின்னால் தள்ளப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருந்தார். திரும்பவும் அவர் போட்டியிடவிருந்தார். இது தொடர்பில் அவர்களுக்குள்ளேயே குடும்பிச் சண்டை இருந்தது. இதனால் தேர்தலை நடத்தினால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டேனும் முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவார் என்ற எண்ணத்தில் சுத்துமாத்துகளுடன் சேர்ந்து இந்த தேர்தலை சட்டச் சிக்கல்களுக்கு உள்ளாக்கியவர்கள் இவர்களேதான். நாங்கள் அந்தத் தேர்தல் தொடர்பான சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்து நடத்துவதற்காக குழுவொன்றை அமைத்துள்ளோம். எங்களை பொறுத்தவரையில் புதிய முறையில் அதிகமான இளைஞர்களை உள்வாங்கி, பெண்களையும் விகிதாசாரத்தில் அதிகரித்து தேர்தலை நடத்த முன்மொழிந்துள்ளோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *