இலங்கை

பிரபாகரனின் வீட்டைக் குறிக்கும் பதாகை கிழிப்பு; திருமாவளவன் வந்து சென்றபின் அடாவடி

வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த காணியின் மதிலில் ஒட்டப்பட்டிருந்த பதாகை இனம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது.

“தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் சிறு வயதில் வசித்த வீடு” என குறிப்பிட்டு , அவர் வசித்த வீட்டின் படம் அந்த பதாகையில் இருந்த நிலையில் அதனை கிழித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை நேற்று சென்று பார்வையிட்டார். அதன் பின்னரேஇந்தப் பதாகை கிழிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் இருக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *