உலகம்

பஹ்ரைனிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது மீண்டும் தாக்குதல்

பஹ்ரைனில் உள்ள அல்-ரிஃபா வான்படைத் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க வான் பாதுகாப்பு ரேடார் நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் இன்றைய தினம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களில் பஹ்ரைனை இலக்கு வைத்து ஈரான் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி இதுவாகும்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஆறு ட்ரோன்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

எனினும், பஹ்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்தத் தாக்குதல்களை அவற்றின் இலக்குகளை அடைவதற்கு முன்பே இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பருக்குப் பிறகு வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்தும் முதல் தாக்குதலாகக் கடந்த வெள்ளிக்கிழமை பஹ்ரைன் மீது ட்ரோன்கள் ஏவப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *