வழிதவறி நிற்கும் ஜனாதிபதி; ஏழைகளின் வயிற்றில் அடித்த ‘முகமது அலி’; சஜித் கடும் சாடல்

ஜனாதிபதி இரண்டு உலகங்களுக்கு இடையே வழிதவறி நிற்பது போலவே உள்ளது .ஏனெனில் அவர் அரசியல் பிறப்பிலிருந்தே மார்க்சிசவாதி. ஆனால் அக்கொள்கையை மறந்துவிட்டு, இப்போது புதிய லிபரல்கொள்கையின் கப்டனாகிவிட்டார் அவர் முன்வைத்திருப்பது குத்துச்சண்டை வரவு செலவுத்திட்டம் .அதாவது முகமது அலி வரவு செலவுத் திட்டம்.இது ஏழையின் முகத்தில், வயிற்றில் அடிக்கும். வரவு செலவுத்திட்டம்.ஏழைகளை மேலும் ஏழைகளாக்கிவிட்டு ,பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடினார்
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு சாடிய அவர் பேசுகையில்,
நிதியமைச்சரும் ஜனாதிபதியுமானவர் புத்த பகவானின்உன்னத தம்மத்தை மேற்கோள் காட்டி தமது வரவு செலவுத் திட்டஉரையை ஆற்றுவதைக் கண்டோம்.அரசநிர்வாகம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்த மிகமுக்கியமான சூத்திரமாகக் கருதப்படுவது சக்கவத்தி சீஹநாதசூத்திரம். நாட்டை எவ்வாறு ஆள்வது, வரவு செலவுத் திட்டங்களைஎவ்வாறு வகுப்பது, அபிவிருத்தியை எவ்வாறு முன்னெடுப்பது,நலன்புரியை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதையெல்லாம்அது கூறுகிறது. எனவே, சக்கவத்தி சீஹநாத சூத்திரத்தைஆதாரமாகக் கொண்டு, ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த வரவு செலவுத்திட்ட உரையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், முறைகேடு,அநீதி, அநியாயம், அழுத்தம், அமைதியின்மை, நெருக்கடி, நசுக்கல்என எல்லா வகையான அழுத்தமான நிலைமைகளையும்மக்களுக்கு உருவாக்கும் வரவு செலவுத் திட்டமாகவே நாம் இதைஅடையாளம் காண்கிறோம்.
உண்மையில், இந்த ஜனாதிபதி பேசும்போது, அவர் இரண்டுஉலகங்களுக்கு இடையே வழிதவறி நிற்பது போலவே தோன்றியது.ஏனெனில் அவர் அரசியல் பிறப்பிலிருந்தே மார்க்சிசவாதி. ஆனால்அக்கொள்கையை மறந்துவிட்டு, இப்போது புதிய லிபரல்கொள்கையின் கப்டன் ஆகிவிட்டார்.இவ்வாறு இரண்டு உலகங்களுக்கு இடையே தனிமைப்பட்டு,ஒதுங்கி, செய்வதறியாது நிற்கும் வேளையில், அவர் வரவு செலவுத்திட்ட உரையில் மயானங்களில் கட்டப்படும் நூல்கள் பற்றியும்,சாபக் கவிதைகள் பற்றியும் பேசுவதைப் பார்த்தோம். அவற்றைப்பற்றிப் பதற்றப்பட ஒன்றுமில்லை . இந்தச்சூனியம் வைப்பது, மயானம் சார்ந்த செயல்கள் எல்லாம்எல்லோரும் செய்வதுதான்; எங்களுக்கும் செய்வார்கள் போலும்.அவை வழக்கமானவைதான்.
தூய நோக்கத்துடன் செயற்படுபவர்கள்மயானங்களில் கட்டப்படும் நூல்களுக்கோ, சூனியங்களுக்கோ,சாபக்கவிதைகளுக்கோ அஞ்சமாட்டார்கள். இப்போது எங்களுக்குச்சூனியம் வைத்தாலும் ஒன்றுதான், வைக்காவிட்டாலும் ஒன்றுதான். இது தூய நோக்கத்துடன், நேர்மையானஇலக்குடன் உருவாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் என நான்நினைக்கவில்லை.
ஐந்து மணி நேர வரவு செலவுத் திட்ட உரையைநாம் கேட்டோம். குறிப்பாகச் சொல்ல வேண்டியது, இது மக்கள்விடுதலை முன்னணியின் முதலாவது வரவு செலவுத் திட்டம்அல்ல. முதலாவது வரவு செலவுத் திட்டம் நினைவிருக்கும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையும்இணைத்துக்கொண்டு தயாரித்த வரவு செலவுத் திட்டம் அது.நினைவிருக்கிறதல்லவா, சரத் அமுனுகம அதைச்சமர்ப்பித்தார். அதை “சரதியலின் வரவு செலவுத் திட்டம்” என்றுஅழைத்தார்கள். அந்தச் சரதியலின் வரவு செலவுத் திட்டத்தில்வழங்கப்பட்ட வாக்குறுதி என்ன? பணக்காரர்களிடமிருந்து எடுத்துஏழைகளுக்குக் கொடுப்பது என்பது.
அந்த அசல்ஜே.வி.பி.யுடன் சேர்ந்து செய்தபோது என்ன சொன்னார்கள்? உலகவங்கிக்கு மாட்டியிருக்கும் பிளக்கை கழற்றுவோம் என்றார்கள் .சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தைஅகற்றுவோம் என்றார்கள் .வீரமிக்க சரதியலின் வரவுசெலவுத் திட்டத்தை வழங்குவோம் என்றார்கள் .இந்தநேரத்தில் இப்போது அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாகி,ஜே.வி.பி. ஜனாதிபதி பதவியைப் பெற்று, பாராளுமன்றத்தில்மூன்றில் இரண்டு பங்கைப் பெற்று, பெரும்பாலான உள்ளூராட்சிமன்றங்களில் அதிகாரத்தைப் பெற்ற பின்னர், நீங்கள்முன்வைத்திருப்பது அந்தக் குத்துச்சண்டை வரவு செலவுத்திட்டத்தை, முகமது அலி வரவு செலவுத் திட்டத்தை. வயிற்றில்அடிக்கும் வரவு செலவுத் திட்டத்தை. சாதாரண மனிதனின்,ஏழையின் வயிற்றில் அடித்து, ஏழைகளை ஒதுக்கிவிட்டு,பணக்காரர்களுக்கு இடம் கொடுக்கும் வரவு செலவுத் திட்டம்.
வாழ்க்கைச் செலவு விண்ணைத் தொட்டு, இன்று மிகக் கடுமையான பிரச்சினைஉருவாகியிருக்கிறது. நீங்கள் அழகான வாழ்க்கையைஉருவாக்குவோம் என்றீர்கள், ஆனால் செய்திருப்பது வாழ்க்கையைஅவலட்சணமாக்கியதுதான். வளமான தேசத்தை, வளமான நாட்டைஉருவாக்குவோம் என்றீர்கள், ஆனால் நீங்கள் செய்திருப்பதுவறுமையை ஊக்குவித்ததுதான்.
இதோ ஒரு முக்கியமானவிடயத்தை முன்வைக்கிறேன் .இது புள்ளிவிவரங்களின்படி100% உண்மை. 2019க்கும் 2025க்கும் இடையில் வருமானம்மேல்நோக்கிப் பகிரப்பட்டுச் சென்றிருக்கிறது — ஏழையிடமிருந்துபணக்காரனுக்கு.இது மிகத் தெளிவானது. கீழ் அடுக்கில் உள்ளவர்களின் வருமானம்கூர்மையாகக் குறைந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் மிகஏழ்மையான 20%இன் உண்மையான குடும்ப வருமானம் சதவீதஅடிப்படையில் 19.6% வீழ்ச்சியடைந்துள்ளது. மேல் அடுக்கில்செல்வம் வளர்ந்துள்ளது — மிகப் பணக்கார 20%இன் உண்மையானகுடும்ப வருமானம் 6.8% உயர்ந்துள்ளது. மிகப் பணக்கார 20%க்கும்மிக ஏழ்மையான 20%க்கும் இடையிலான சராசரி வருமானஇடைவெளி 11.2 மடங்காக இருந்தது; மிகப் பணக்காரக்கூட்டத்துக்குச் சாதகமாக அது அதிகரித்து, இப்போது 14.8மடங்காகியுள்ளது. ஏழைகளை மேலும் ஏழைகளாக்கினீர்கள்,பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கினீர்கள். உழைக்கும்மக்களின் குடும்பங்களுக்குரிய பங்கு சுருங்கியுள்ளது. மிகஏழ்மையான 20%இன் வருமானப் பங்கு கீழே விழுந்துள்ளது. ஆனால்அவ்வாறு நிகழும்போது, குறிப்பாக மிகப் பணக்காரர்களின் பங்குஉயர்ந்துள்ளது. பெரிய பணக்கார 20% உரிமை கொள்ளும் வருமானப்பங்கு 55.8% வரை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணங்கள்: போதியசம்பளம் கிடைக்காமை, மிக அதிக பணவீக்கம், வாழ்வாதாரஆதரவுகளின் தேய்மானம்.ஆகவே உண்மையில், நீங்கள் “இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது”என்று சொல்வது இதைத்தான். இயல்பு நிலைக்குத் திரும்பியிருப்பதுடிரில்லியன் செல்வந்தரின், மிகத் தீவிரப் பணக்காரரின்நன்மைக்காக — ஏழையின், சாதாரண மக்களின், உழைக்கும்மக்களின், நடுத்தர வர்க்கத்தின் பாதகத்துக்காக என்பதை இந்தவேளையில் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது நீங்கள்அரவணைத்து முத்தமிடும் சில நிறுவனங்கள் இருக்கின்றனவே.சர்வதேச நாணய நிதியத்தை அணைக்கிறீர்கள், முத்தம்கொடுக்கிறீர்கள்; உலக வங்கியை அணைக்கிறீர்கள், முத்தம்கொடுக்கிறீர்கள்; ஆசிய அபிவிருத்தி வங்கியை அணைக்கிறீர்கள்,முத்தம் கொடுக்கிறீர்கள்.இப்போது நீங்கள் முத்தம் கொடுக்கும் உலக வங்கி வறுமை பற்றிஎன்ன சொல்கிறது? 2026 ஒக்டோபர் உலக வங்கி அறிக்கைநம் நாட்டில் 60% பேர் ஏழைகள் என்கிறது. ஆனால் நீங்கள் என்னசொல்கிறீர்கள்? இதற்கு நீங்களும், அதேபோல மக்கள்தொகைமற்றும் புள்ளிவிவரத் திணைக்களமும் உண்மையிலேயேபொறுப்புக்கூற வேண்டும்.இதுதான் கள உண்மை, கள யதார்த்தம். ஒரு நபருக்குநாளொன்றுக்குத் தேவையான கிலோ கலோரி அளவு 2030 என்றுநீங்கள் கூறுகிறீர்கள். அது முற்றிலும் தவறு. எம்.ஆர்.ஐ.யிடம்கேளுங்கள்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் அது அவரவர்செயற்பாடுகளுக்கேற்ப மாறுபடும். இந்த 2030 என்று ஒரு சராசரியைஎடுத்தது தவறு. அந்தத் தவற்றில்தான் நீங்கள் மிகப் பெரியதவறைச் செய்கிறீர்கள். ஒரு நபர் 30 நாட்கள் வாழ ரூபா 17,742தேவை என்கிறீர்கள். ரூபா 17,000 அல்லது 18,000இல் ஒரு நபர் 30நாட்கள் வாழ முடியுமா? ஏனெனில் 2030 கிலோ கலோரி என்றகணிப்பு முற்றிலும் தவறு.
அப்படியானால் உங்களுக்கு இன்னொரு அறிக்கையைமுன்வைக்கிறேன் — யூ.என்.டி.பி.யின் பலபரிமாண வறுமைஅறிக்கை. இந்த அறிக்கையும் காட்டுவது என்ன? நம் நாட்டில்வறுமை மிகக் கடுமையாக அதிகரித்துள்ளது. இதுதான் களஉண்மை. இப்போது கேட்க விரும்புகிறேன், உங்கள் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயத்துக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதா?அறுவடை செய்து செய்து விவசாயிகளுக்கு 150 தருவோம் எனவாக்குறுதியளித்த நெல் கிலோ விலை இன்று 98, 95, அதிகபட்சம்95. அறுவடை செய்துகொண்டே சொன்னீர்கள். நெல் விவசாயிக்குநெல் கிலோவுக்கு எவ்வளவு கொடுக்கிறீர்கள்? உண்மையைப்பேசுவோம். வட்டியில்லாக் கடன் வழங்கி, சிறிய மற்றும் நடுத்தரஅளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலம் இந்தவிலையை உயர்த்துவோம் என்றீர்கள். அதுநடைமுறைப்படுத்தப்படவில்லை. நெல் விவசாயம் மட்டுமல்ல;பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய், மேட்டுநிலப்பயிர்கள், பழங்கள், ஏற்றுமதிப் பயிர்கள் என எல்லாம்வீழ்ந்துவிட்டன. மலைநாட்டுக் காய்கறிப் பயிர்ச்செய்கையும்முற்றாக வீழ்ந்துவிட்டது. இந்த விவசாயத்துக்காக நீங்கள் இந்தவரவு செலவுத் திட்டத்தின் மூலம் கடுகளவு கூட வழங்கவில்லை.
கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை மாற்றுவோம் என்றவாக்குறுதியை நிறைவேற்றினார்களா? இல்லையே; இது மிகப்பெரிய ஏமாற்று அல்லவா?
அரச ஊழியர்கள் 15 இலட்சம் பேர் இருக்கிறார்கள்; அவர்களுக்காகும்செலவு, சம்பளம் உயர்த்தும்போது ஏற்படும் செலவு, கிடைக்கும்பயன் என்ன என்று சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி இப்போதுகூறுகிறார். ஏன் இந்தப் பேச்சை தபால் மூல வாக்களிப்புக்கு முன்சொல்லவில்லை? விவசாயி தெய்வம் என்றீர்கள், விவசாயி அரசர்என்றீர்கள், தேர்தலுக்குப் பிறகு விவசாயி கசிப்புக்காரர் என்றீர்கள்.தேர்தலுக்கு முன் அரச ஊழியர்களை உயர்வாக நடத்தினீர்கள்,தேர்தல் முடிந்தவுடன் அரச சேவையால் கிடைக்கும் பயன் என்னஎன்று கேட்கிறீர்கள். ஓய்வூதியர்களின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இல்லை. முதியோருக்கு வழங்கிய 15%சேமிப்பு வட்டியை ஏன் வழங்குவதில்லை?
இந்த வரவு செலவுத் திட்டத்தில் மின் கட்டணத்தை 33% குறைக்கும்பிரேரணை எங்கே? மின் கட்டணம் 2,000, 6,000 ஆக்குவோம்என்றீர்கள், 33% குறைப்போம் என்றீர்கள். ஏன் அந்தப் பிரேரணைஇல்லை? வாக்குறுதியளித்த அந்த ‘இலட்சத்தின் பிஸ்கட்டுகள்’எங்கே? ரூபாய் 5,000க்கு வழங்குவோம் என்ற ஜப்பானிய மோட்டார்சைக்கிள் எங்கே? துறைமுகத்தில் இறக்கப்படும் செலவுக்கேஎண்ணெய் வழங்கப்படும் என்றீர்கள், அமைச்சர்களுக்கும்அதிகாரிகளுக்கும் கமிஷன் போகிறது என்றீர்கள் அவைஎல்லாவற்றையும் அகற்றுவோம் என்றீர்கள். சொன்னீர்கள்அல்லவா? அதுதான் உண்மையான கதை.
இன்று என்ன நடந்திருக்கிறது? இருந்தவர்கள் இல்லாதவர்களாகி,இல்லாதவர்கள் முற்றாக அழிந்துவிட்டார்கள். மீண்டும் ஒருமுறைவரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தல் ஓர் உலக விருதைப்பெற்றிருக்கிறது — பொய், மோசடி, ஏமாற்றுவித்தையால். இது வரவுசெலவுத் திட்டம் அல்ல, இது ஏமாற்றுத் திட்டம்.உங்களுக்கு 68 இலட்சம் பேர் வாக்களித்தது வளமான நாடு,அழகான வாழ்க்கையை உருவாக்குவதற்காக. இன்றிரவே 159 பேரும்இந்தப் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள். இதிலுள்ளகனவுகளை நீங்கள் கொன்றிருக்கிறீர்கள்.
பெரிய துரோகங்கள் பற்றிநாம் கேள்விப்பட்டிருக்கிறோம் — யூதாஸ் காட்டிக்கொடுத்தார்,புருட்டஸ் காட்டிக்கொடுத்தார். ஆனால் மிகப் பெரிய துரோகம் 68இலட்சம் பேரின் எதிர்பார்ப்புகளையும், வாக்களித்தவர்கள்வாக்களிக்காதவர்கள் என 220 இலட்சம் பேரின் கனவுகளையும்மழுங்கடித்து, மங்கச் செய்து அழித்ததுதான். ஆகவேஉண்மையில், தெளிவாகவே இந்த அரசாங்கம் இடதுபுறம் சமிக்ஞைகாட்டிவிட்டு வலதுபுறம் திரும்பி, மார்க்சியத்தைக் காட்டிக்கொடுத்து,புதிய லிபரல்வாத கொள்கையை அரவணைத்துக்கொண்டிருக்கிறது.மக்களுக்கு ஒன்றைச் சொல்லிவிட்டு இன்னொன்றைச் செய்வதுஇழிவான செயல். ஆகவே புதிய லிபரல்வாதக் கொள்கையைக்கைவிட்டு, தீவிர மார்க்சியத்தையும் சோசலிசத்தையும் கைவிட்டு,நாட்டுக்கு முக்கியமான ஒரே பாதையான நடுநிலைப் பாதை சமூகஜனநாயகம் மற்றும் சமூகச் சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிவருமாறு கின்றேன் என்றார்.
![]()