பலதும் பத்தும்

டீ குடிக்கும் போது தவிர்க்க வேண்டியவை!

வெறும் வயிற்றில் டீ வேண்டாம் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

சாப்பிட்ட உடனேயே டீ குடிக்காதீர்கள் உணவு உண்ட உடனேயே டீ குடித்தால், உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை டீயில் உள்ள டானின் தடுத்துவிடும்.

டீயை அதிக நேரம் கொதிக்க வைக்காதீர்கள் டீத்தூளை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து, கசப்புத் தன்மை மற்றும் அமிலத்தன்மை அதிகரிக்கும்.

ஆறிய டீயை மீண்டும் சூடுபடுத்த வேண்டாம் ஏற்கனவே தயாரித்து ஆறிப்போன டீயை மீண்டும் சூடுபடுத்திக் குடிப்பது வயிற்றுப் போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கும்.

அதிக சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும் டீயில் அதிக அளவு வெள்ளை சர்க்கரை சேர்த்துக் குடிப்பது உடல் எடை அதிகரிப்பு மற்றும் சர்க்கரை நோய் அபாயத்தை அதிகரிக்கும்.

அளவோடு அருந்தி ஆரோக்கியம் காப்போம்ஒரு நாளைக்கு 2 கப் டீக்கு மேல் குடிப்பதைத் தவிர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

இரவில் தூங்கும் முன் டீ வேண்டாம் டீயில் உள்ள காஃபின் தூக்கத்தைக் கெடுத்து, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *