பலதும் பத்தும்

உலகச் சுற்றுலாப் பயணத் திட்டத்தில் பங்கேற்கும் இலங்கை

உலகப் புகழ்பெற்ற ஃபோர் சீசன்ஸ் தனியார் ஜெட் சொகுசு உலகச் சுற்றுலாப் பயணத் திட்டத்தில் 2028ஆம் ஆண்டில் முதன்முறையாக இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு 238,000 அமெரிக்க டொலர்கள் கட்டணமாகக் கொண்ட 23 நாட்கள் கொண்ட இந்த ஆடம்பரப் பயணத்தில், 48 உயர்மட்டச் சுற்றுலாப் பயணிகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஏர்பஸ் A321 தனியார் ஜெட் விமானம் மூலம் எட்டு நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளனர்.

 சுற்றுலாத் தலம்

 

இதன்படி, 2028 மே 12 முதல் 15ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்தச் சுற்றுலாப் பயணிகள், தென் கடற்கரையில் அமைந்துள்ள ரெஸ்பிளென்டன்ட் சிலோன் குழுமத்திற்குச் சொந்தமான கேப் வெலிகம சொகுசு விடுதியில் தங்கவுள்ளனர்.

உலகச் சுற்றுலாப் பயணத் திட்டத்தில் பங்கேற்கும் இலங்கை | Sri Lanka Joins Four Seasons Private Jet Tour 2028

இலங்கையின் சொகுசு விருந்தோம்பல் துறைக்குக் கிடைத்துள்ள மிக முக்கிய அங்கீகாரமாக இது அமைந்துள்ளதாக எம்.ஜே.எஃப் குழுமத்தின் இணைத் தலைவர் மாலிக் ஜே. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உலகின் அதிக செலவு செய்யும் உயர்மட்டச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கையின் நற்பெயரை இது மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *