உலகம்

அவுஸ்திரேலியாவின் இலங்கை மருத்துவரின் மோசமான செயலால் ஏற்பட்ட விபரீதம்

அவுஸ்திரேலியாவில் பணியாற்றி வந்த இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக 3 மாதங்களுக்கு தொழில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் பொது மருத்துவமனையில் பணிப் பயிற்சிக்காக வந்த மருத்துவ மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டிற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்வதற்கு முன்னர் பெலாரஸில் தனது மருத்துவப் பயிற்சியைப் பெற்றவருமான விதான புஷ்கர என்ற 50 வயதுடைய மருத்துவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகத் தடை

குறித்த மாணவிக்கு தகாத ரீதியாக தொல்லை கொடுத்ததாக தீர்ப்பளிக்கப்பட்டு 19 மாதங்களின் பின்னர், விக்டோரியன் சிவில் மற்றும் நிர்வாக நீதிமன்றத்தினால் கடந்த இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகத் தவறு காரணமாக நீண்ட தாமதம் ஏற்பட்டதாகவும், சுமார் ஐந்து ஆண்டுகளாக இந்த விசாரணைகள் மருத்துவருக்கு பெரும் சுமையாக இருந்ததாகவும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நீதிபதி குழு குறிப்பிட்டது.

மருத்துவர் புஷ்கரவின் நடத்தை அவரது இயல்புக்கு முற்றிலும் மாறானது எனவும் அது தகாத நோக்கம் கொண்டதல்ல எனவும் இந்த விசாரணை மருத்துவருக்கு ஆழ்ந்த மனத் துயரத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணி குறிபிட்டுள்ளார்.

நீதிபதிகள் தீர்ப்பு

இதன் காரணமாக அவர் 21 மாதங்களாக தன்னைத்தானே இடைநீக்கம் செய்து கொண்டதாக சட்டத்தரணி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் இலங்கை மருத்துவரின் மோசமான செயலால் ஏற்பட்ட விபரீதம் | Sri Lankan Doctors Worst Behaviour In Australia

குறித்த மாணவிக்கு எந்தவொரு வலியையும் ஏற்படுத்த அவர் ஒருபோதும் நினைத்ததில்லை. தனது பௌத்த நம்பிக்கையின் ஊடாக, அந்த மாணவியின் துயரங்களை முடிவுக்கு வர வேண்டும்.

மருத்துவத் துறையில் அவர் நீண்ட மற்றும் வெற்றிகரமான எதிர்காலத்தைப் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் மருத்துவர் தனது சட்டத்தரணி ஊடாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொதுவானதொரு எச்சரிக்கையை வழங்க வேண்டிய தேவை உள்ளதால், மூன்று மாத இடைநீக்கத்திற்கு குறைந்த எந்தத் தண்டனையும் போதுமானதாக இருக்காது என நீதிபதிகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *