உலகம்

“டார்க் வெப்” பயனர்களுக்கு எதிரான சோதனை – 354 பேர் கைது, போதைப்பொருள் மீட்பு

“டார்க் வெப்” பயனர்களுக்கு எதிரான உலகளாவிய சோதனை நடவடிக்கையில் 354 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யூரோபோல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது பெருமளவிலான போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் மற்றும் பணம் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தக் காவல் அமைப்பு, “ஆபரேஷன் டொர்நேடோ” “Operation TorNado”, என்ற குறியீட்டுப் பெயரில், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2026 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சோதனைகள் நடத்தப்பட்டன.

பெரும்பாலான கைதுகள் பிரிட்டனிலும் (59 கைதுகள்) அமெரிக்காவிலும் (132 கைதுகள்) நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில், ஆம்பெடமைன்கள், கெட்டமைன், MDMA, கோகோயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட கிட்டத்தட்ட ஒரு டன் சட்டவிரோத போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல் அமெரிக்காவில் 4.8 டன்களுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன், 152 துப்பாக்கிகள் மற்றும் €150 மில்லியன் (S$200 மில்லியன்) ரொக்கம் மற்றும் கிரிப்டோகரன்சியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் இந்த உலகளாவிய சோதனை நடவடிக்கையில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உட்பட 14 நாடுகளின் காவல் படைகள் ஈடுபட்டிருந்ததாக யூரோபோல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *