போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள் ; ஈரானின் நேரடி எச்சரிக்கையால் அதிரும் உலகம்

அமெரிக்கா நினைத்தால் ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுவதுமாக அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு, “போரைத் தொடங்கினால் நரகத்தை பார்ப்பீர்கள்” என ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் தீவிரமடைந்துள்ள சூழலில், கடல்வழி வர்த்தகத்தில் கடும் இடையூறுகள் ஏற்பட்டு உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்கள்
இதன்காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) அமெரிக்கா தனது இராணுவப் படைகளை நிலைநிறுத்தித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், “ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டுமானால், அந்நாடு தனது அணுசக்தி திட்டத்தைக் கைவிட வேண்டும் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும்.
தேவைப்பட்டால் தாக்குதல்களைத் தொடரத் தயாராக உள்ளோம். ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 வானூர்தி-தாங்கி கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானில் உள்ள 38 முக்கிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறோம். ஒரே மணி நேரத்தில் ஈரானை முழுமையாக அழித்துவிட முடியும்” என எச்சரித்தார்.
ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கைக்குப் பதிலளித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “நீங்கள் போரைத் தொடங்குங்கள்; அப்போது எங்கள் வீரர்கள் உங்கள் மீது நரகத்தை மழையாகப் பொழிவார்கள்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்குக் முன்னால் நாங்கள் மெத்தனமாக இருக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார். அதேவேளை, அமெரிக்கா ஏதேனும் தவறு செய்தால் ஈரானின் பதிலடி பேரழிவாகவும் கடுமையாகவும் இருக்கும் என ஐ.ஆர்.ஜி.சி. (IRGC) பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி எச்சரித்துள்ளார்.
![]()