இலங்கை

ஞானசார தேரருக்கு கைவிலங்கிடக் கூடாது – நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் வணக்கத்துக்குரிய கலகொடத்த ஞானசார தேரரை, அவரது அங்கியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை பி. ஏ. ரத்னபால என்ற மருத்துவர் தாக்கல் செய்துள்ளார்

மேலும், இந்த மனு மீதான விசாரணைக்குப் பிறகு இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை, ஞானசார தேரரை கைவிலங்கிட்டோ அல்லது சாதாரண உடையிலோ ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ காட்சிப்படுத்துவதைத் தடுக்குமாறும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிறை விதிகளின் பிரிவு 156(2)-ல் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு அப்பால், தேரரை புகைப்படம் எடுப்பதற்கோ, காணொளி எடுப்பதற்கோ, பரப்புவதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது எந்த வகையிலும் வெளியிட அனுமதிப்பதற்கோ தடை விதிக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவும் இந்த மனு கோருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *