பிக்குகளின் போராட்டத்தில் மர்ம நபர்களின் சதி; அரசாங்கம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

அநுராதபுரத்தில் அமைதியான முறையில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
குறித்த போராட்டத்தில் பொலிஸாரைப் பயன்படுத்தி அரசாங்கம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதாரங்கள்..
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவைப் பெற்று பிக்குகளை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோதலைத் தொடங்கிய நபர்கள் தொடர்பான காணொளிச் சான்றுகள் இருந்தபோதிலும், பொலிஸார் அமைதியாகப் போராடிய பிக்குகளையே கைது செய்துள்ளனர்.
பௌத்த மரபுரிமைக்கு உரித்தான ருவான்வெலிசாய புனிதப் பிரதேச அபிவிருத்தி என்ற பெயரில் தொல்லியல் சான்றுகளை சேதப்படுத்தவோ பிக்குகளின் உரிமைகளைப் பறிக்கவோ அரசாங்கத்திற்கு பௌத்தர்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
![]()