உலகம்

2028 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் ஆதரவு யாருக்கு?

2028 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூட்சுமமாக தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ் (CBS) தொலைக்காட்சியில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இந்தத் தேர்தல் போட்டியில் தலையிடாமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் “நான் ஆதரவு அளித்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; ஏனெனில், எனது ஆதரவு என்பது மிகவும் வலிமையானது” என்று அவர் கூறினார்.

அதேநேரம் துணை அதிபர் ஜே.டி. வான்ஸைத் தவிர, தனக்குப் பின் வரக்கூடிய சாத்தியமான வேட்பாளராக யாரைக் கருதுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மார்கோ ரூபியோவை அவர் புகழ்ந்து, அவர் ஒரு வலுவான வேட்பாளர் என்று குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *