சுவிஸ் ஏரியில் சுனாமி? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள திடுக் தகவல்

ஜெனீவா ஏரியில் சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
காடுகளை அழித்தல் முதலான, மனிதர்கள் செய்யும் சில விடயங்களால், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியில் சுனாமி உருவாகலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.
ஜெனீவா ஏரியில் சுனாமி?
ஜெனீவா ஏரியில் சுனாமி ஏற்படுமா என்றால், ஏற்கனவே கி.பி 563ஆம் ஆண்டில் அப்படி ஒரு விடயம் நடந்துள்ளது என்கிறது வரலாறு!
ஆம், Rhône நதியின் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமான பாறைகளும் மண்ணும் நதியை வந்தடைய, நதிக்கு அடியில் சேறு அடித்துச் செல்லப்பட, அதனால், 40 முதல் 50 அடி உயர அலைகள் உருவாகியுள்ளன.
அந்த அலைகள் ஜெனீவா நதியை வந்தடையும்போது, 25 அடி உயர அலைகளாக மாறி, லோசான் முதல் ஜெனீவா வரை வந்தெட்டியுள்ளன.
மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் தாக்கிய அந்த அலைகள், ஜெனீவாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
ஆக, ஜெனீவா ஏரியில் சுனாமி உருவாவது சாத்தியமே என்கிறார்கள் Savoie Mont Blanc பல்கலை ஆய்வாளர்கள்.
அத்துடன், தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக காடுகளை அழித்தல், விவசாயம், கால்நடைகள் ஆல்ப்ஸ் பகுதியில் புல் மேய்தல் ஆகிய விடயங்களால் ஏரிகளுக்குள் வண்டல் மண் சென்றடைந்து, சரிந்துவிடக்கூடிய டெல்டா சரிவுகளை ஏற்படுத்துவதால், அவை நிலநடுக்கம் ஏற்படும்போது நிலைகுலையலாம்.
ஆக, அதனால் ஜெனீவா ஏரியில் சிறிய அளவிலான சுனாமி ஏற்படும் அபாயம் உண்மையாகவே உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
![]()