பலதும் பத்தும்

கடல் நடுவே எல்.இ.டி விளம்பர பலகைகள்; கோடிக்கணக்கில் வருமானம்

மும்பை நகரின் அரபிக்கடல் பகுதியில் பொதுமக்கள் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீடுகளை வாங்கி வரும் நிலையில், தற்போது மும்பை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எல்.இ.டி விளம்பரப் பலகைகளை அமைக்க மஹாராஷ்டிரா கடல்சார் வாரியம் டெண்டர் வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூஹு பீச், பாந்த்ரா-வோர்லி சீ லிங்க் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் சுமார் 40 அடி அளவு கொண்ட பிரம்மாண்ட விளம்பரப் பலகைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
பல கோடி ரூபாய் செலவில் கடலையும் இயற்கை அழகையும் ரசிக்க வீடு வாங்கிய பொதுமக்கள், தங்களின் பால்கனியில் இருந்து பார்க்கும்போது மிதக்கும் விளம்பரங்களைப் பார்ப்பது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மிதக்கும் எல்.இ.டி விளம்பரங்களின் அதிகப்படியான வெளிச்சம் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வியலையும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் எச்சரிக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஆதித்யா தாக்கரே இந்த முடிவை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுக்குக் கடிதம் எழுதியுள்ளார். பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *