இலங்கை

அநுராதபுரத்தை அழிக்காதீர்கள்; அகழ்வாராய்ச்சிக்கு உதவுங்கள்!; இந்தியாவிடம் கம்மன்பில கோரிக்கை

பௌத்தர்களின் இதயத்தை சத்திரச் சிகிச்சைக்கு உட்படுத்த பௌத்த விரோத அரசாங்கத்திற்கு இடமளிக்க மாட்டோம் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிமா போதியை வழிபடுவதை விமர்ச்சித்த பிமல் ரத்நாயக்கவிடமே அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தி பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது நரியிடம் கோழியை ஒப்படைத்ததை விடவும் ஆபத்தான விடயமாகும். நாங்கள் 14 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விரோத அரசாங்கம் என்பதனை கூறிக்கொள்கின்றோம்.

அநுராதபுரம் என்பது தேரவாத பௌத்தர்களின் இதயமாகும். பௌத்த விரோத அரசாங்கத்தினால் பௌத்தர்களின் இதயத்தை சத்திரச் சிகிச்சைக்கு உட்படுத்த இடமளிக்க முடியாது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பௌத்தர்கள் அல்லாதவர்கள் என்றாலும் பௌத்த எதிர்ப்பாளர்களாக இருந்ததில்லை. இதனால் இந்த யுகங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளைக்கூட தற்போதைய பௌத்த விரோத அரசாங்கத்திற்கு செய்வதற்கு இடமளிக்க மாட்டோம்.

இதேவேளை அநுராதபுரம் புனித பூமி தொடர்பில் நிதி உதவிகளை வழங்குவதற்கு தேவையேற்பட்டால் அதற்கு புனித நகரத்தை அபிவிருத்தி செய்ய அன்றி, அங்கு நிலங்களின் கீழுள்ள 3500 வருடங்களை பழமையான அநுராத நகரத்தை ஆகழ்வுகளின் மூலம் வெளிப்படுத்தி, அதனை பாதுகாப்பதற்கு நிதி உதவிகளை வழங்குமாறே நாங்கள் இந்தியாவை கேட்கின்றோம். அதனை விடுத்து அநுராதபுரம் புனித பூமியை அபிவிருத்தி செய்வது என்பது மக்களின் அடிப்படைய உரிமைகளை நிலத்திற்குள் புதைப்பதாகவே அமையும். இதனால் அவ்வாறான விடயங்களை செய்துவிட வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *