இலங்கை

”சிறைச் சுவர்களுக்குள் இருப்பவர்களும் மனிதர்களே”; எக்ஸ் தளத்தில் நாமல் வெளியிட்ட பதிவு

கைது செய்யப்பட்டு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மீதான தாக்குதல்கள், சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புகளை தனிப்பட்ட சம்பவங்களாகக் கருத முடியாது. அவர்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் விளக்கமறியலில் இருக்கும் காலத்தில், சிறைச்சுவர்களுக்குள் இருப்பவர்களும் அரச நிறுவனங்களின் பாதுகாப்பில் உயிர் வாழும் மனிதர்கள் என்பது தெளிவானதாக, பாராளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை மேற்கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சோகமான சம்பவத்தில் 28 பேர் உயிரிழந்ததுடன், மரண பரிசோதனை அறிக்கைகளின்படி அவர்களில் 17 பேர் துப்பாக்கிச் சூட்டினாலும், 11 பேர் தாக்குதல்களினாலும் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், குருநாகல், கொபேகனையில் இடம்பெற்ற 41 வயதுடையவரின் மரணமும் அரச காவலில் உள்ளவர்களின் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுவதற்கு காரணியாக அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சம்பவம் இடம்பெற்று சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும், சட்ட மருத்துவ அறிக்கைகள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை என்றும், பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் போது அதன் அர்த்தம் இல்லாமற்போகிறது. அரசியல் இலாபங்களுக்கு அப்பால் சென்று நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் குறிப்பிடும் நாமல் ராஜபக்‌ஷ, ஒருவரின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடிந்தாலும் வாழும் உரிமை, கண்ணியம் மற்றும் பாதுகாப்பை இழக்கச் செய்ய முடியாது என்றும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *