இலங்கை

அனுராதா – அம்பிட்டியவின் இரகசிய சதி.. ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக செயற்படும் அரச அதிகாரிகள்

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்தில் பண்ணையாளர்களுக்கு நீதிகோரிய போராட்டம்   முன்னெடுக்கப்பட்டது.

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விடயத்தில் அரச தரப்பிலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் சில அதிகாரிகள் அதற்கு எதிராக செயற்படுவதாக தொடர்நது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இவ்வாறிருக்கையில், பொலிஸாரின் காவலரன்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல தடை இருக்கும் போதிலும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜெயம்பத் மற்றும் அம்பிட்டிய சுமன தேரர் ஆகியோர் அங்கு இரகசியமாக கூட்டங்களை நடத்துகிறார்கள் என ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் தியாகராஜா இந்த பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“அவர்களுக்கு மட்டும் அந்த பொலிஸார் எந்த ஒரு தடையும் ஏற்படுத்துவதில்லை. மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு நீதிமன்றம் முக்கியமான ஒரு தீர்ப்பு வழங்கிவிட்டது.

ஆனால் அதனை கூட நடைமுறைப்படுத்துகிறார்கள் இல்லை. இங்கு குழப்பம் விளைவிப்பவர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் நிலம் இருக்கின்றது” என தியாகராஜா கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *