பலதும் பத்தும்

குழந்தைகள் உட்கொண்ட இனிப்புகளில் உலோக பொருட்கள் அவதானிப்பு

ஜெர்மனியில், ஹாலோவீன் பண்டிகையின் போது குழந்தைகள் சேகரித்த சில இனிப்புகளில் ஆணிகள், திருகுகள் மற்றும் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மியூனிக்கில் நண்பர்களுடன் வீடு வீடாகச் சென்று இனிப்புகளைச் சேகரித்த ஒன்பது வயது குழந்தை மிட்டாய் ஒன்றை உட்கொண்டபோது அதில் ஆணிகள் இருப்பதை அவதானித்து பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து இந்த விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல் பிரெமர்வோர்டேவில் (Bremervoerde), 09 வயது சிறுமி உட்கொண்ட சோக்லேட்டில் 5 செ.மீ நீளமுள்ள ஊசி இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

ஃபெஹ்மார்ன் (Fehmarn) தீவில், 11 வயது சிறுமி உட்கொண்ட சோக்லேட்டில் தையல் ஊசி இனங்காணப்பட்டுள்ளது.

மேலும் மத்திய நகரமான உம்ப்பெர்ஸ்டெட் (Umpferstedt) பகுதியில், 11 மற்றும் 12 வயதுடைய இரு குழந்தைகள் சேகரித்த சூயிங் கம் (chewing gum) பாக்கெட்டுகளில் உலோக ஸ்டேபிள்கள் (staples) கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் குறித்துக் காவல்துறையினர் குற்றவியல் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், ஆனால் இதுவரை சந்தேக நபர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *