இந்தியா

மோடி அரசுக்கு தலையிடி: டெல்லியில் தீவிர பாதுகாப்பு

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி  நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்த’ (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் போது, ​​வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாடு தழுவிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி இன்று ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி ஏற்பாடு செய்தது.

இந்தப் பேரணியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மக்களவை உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தப் பேரணிக்காக  மக்கள் கூடத் தொடங்கினர். இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள நிலையில், டெல்லி காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *