உலகம்

செர்பியாவில் அணித்திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் – 16 பேருக்கு அஞ்சலி

செர்பியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ரயில் கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 16 பேருக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்காக நோவி சாட் நகரில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் 16 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் மலர் வளையம் வைத்தும், மெழுகு திரி ஏற்றியும் துக்கம் அனுசரித்தனர்.

சீனாவின் ஆதரவுடனான அதிவேக ரயில் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட ஒரு நிலையத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராகவும் மக்கள் பாரிய போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

இதன்விளைவாக ஆட்சியாளர்கள் பதவி விலகியதுடன், விரைவான தேர்தல்களும் இடம்பெற்றது. தற்போது அங்கு புதிய அரசாங்கம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *