இலங்கை

நாமலின் சிறை தண்டனையை சுயலாப அரசியலாக மாற்ற துடிக்கும் மொட்டுவின் ஊழல் சகாக்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான நிதி மோசடி வழக்குகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் சுயலாபங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக முன்வைக்கப்படும் எயார்பஸ் மற்றும் கிரிஷ் நிதி மோசடி வழக்குகள், இலங்கைக்கு வெளியே சர்வதேச மட்டத்திலேயே ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டும் உள்ளன.

எயார்பஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டு சர்வதேச நீதிமன்றங்களில் நட்டஈடு வழங்கியுள்ளனர், மேலும், கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கறுப்புப் பண மோசடிகளில் தொடர்புடைய இந்தியப் தரப்பினர் ஏற்கனவே இந்தியாவில் சிறைத்தண்டனை அனுபவித்தும் வருகின்றனர்.

இத்தகைய வெளிநாட்டுத் தீர்ப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலேயே இலங்கையிலும் இந்த விசாரணைகள் நகர்கின்றன.

இந்நிலையில் நாமல் சிறைக்குச் செல்வது அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுப்பது, தற்போதைய அரசியல் களத்தில் உள்ள சில தரப்பினருக்கு பெரும் அரசியல் மற்றும் நிதி ரீதியான இலாபங்களை பெற்றுத்தருகிறது என நிகழ்ச்சியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

நாமலின் அரசியல் முகாமில் உள்ள சிலரே அவர் சிறைக்குச் செல்வதை விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

நாமல் சிறைக்குச் சென்றால், அதனை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அனுதாப வாக்குகளாக மாற்றி, அரசியல் இலாபம் பெற அவரது கட்சித் தரப்பினர் திட்டமிடுவதாக விமர்சனங்கள் அடுக்கப்படுகின்றன.

“நாமல் சிறையிலுள்ளார், அவரைப் பாதுகாக்க எங்களுக்கு வாக்களியுங்கள்” என்ற கோணத்தில் இவர்களின் திட்டம் அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றில் இருந்து மொட்டுக்கட்சி தனது பிரசார நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது.

சில அரசியல் மற்றும் நிதி ஆதிக்கக் குழுக்கள் தங்களது கடந்தகால முறைகேடுகளை மூடிமறைப்பதற்கும், புதிய நிதிப் பலன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளும் அரசியல் ஆதரவாளர்கள், உண்மையான மக்கள் நலனுக்காக அன்றி, தங்களின் சொந்த நலன்களுக்காகவே இத்தகைய அரசியல்வாதிகளைச் சுற்றி இருக்கிறார்கள் எனவும் கூறப்படுகிறது.a

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *